விஏஓ டூ சார் பதிவாளர்.. அசிங்கப்பட்ட அரியலூர் கிராம நிர்வாக அலுவலர்.. நிலம் அளக்க சொன்னால்? பாருங்க
அரியலூர்: அரசு துறை அதிகாரிகளில் எத்தனையோ பேர், நேர்மையாக பணியாற்றி வரும்நிலையில், ஒருசில அதிகாரிகள் லஞ்சம் வாங்கி அசிங்கப்பட்டு விடுகிறார்கள்.. கையும் களவுமாக சிக்கி கைதானாலும்கூட, இதுபோன்ற அதிகாரிகளின் லஞ்ச லாவண்யங்கள் குறைந்தபாடியில்லை.. இன்றுகூட அரியலூரில் அரசு அதிகாரி ஒருவர் சிக்கியிருக்கிறார்.
அரசு துறைகளிலிலேயே, வருவாய்த்துறை, பதிவுத்துறை தான் அளவுக்கு அதிகமாக பணம் புழங்க வாய்ப்புள்ள துறைகளாக விளங்கி கொண்டிருக்கின்றன.. எனவேதான், லஞ்சமும் அதிகமாக புழங்கக்கூடிய துறையாகவும் உள்ளது.

மிகப்பெரிய அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை இப்படியான லஞ்சத்தில் சிக்கி கொள்கிறார்கள். இதில் பெண் அதிகாரிகளும் விதிவிலக்கல்ல.. போலி பட்டா வழங்கல், பிரதமர் வீட்டு வசதித் திட்டம் உட்பட ஏராளமான முறைகேடுகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வரும்நிலையில், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீதும் கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம், ஒரு பகீர் தகவல் வெளியாகியிருந்தது.. அதாவது, தமிழகத்தில் கடந்த 10 வருடங்களில் லஞ்சம் வாங்கியதாக கையும், களவுமாக பிடிபட்டவர்கள் அதிகம் என்றும், பட்டா மாறுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக லஞ்சம் வாங்கியதில் வருவாய்த்துறை முதலிடத்தில் உள்ளதாகவும் செய்தி வெளியானது.
வருவாய்த்துறை: அதாவது, கடந்த 10 ஆண்டுகளில் லஞ்சம் வாங்கிய வழக்குகளில் 2023-24ல் அதிகபட்சமாக 155 வழக்குகளை போலீசார் விசாரித்து வருவதாகவும், 2023-24ல் லஞ்சம் வாங்கியதாக வருவாய்த்துறையினர் மீதுதான் அதிகபட்சமாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டிருந்தது. இது ஒட்டுமொத்த அரசுத்துறைகளுக்கும் பெரும் அதிர்ச்சியை தந்தது.
இந்நிலையில், அரியலூர் விஏஓ ஒருவர் சிக்கியிருக்கிறார். அரியலுார் மாவட்டத்தில், வங்குடி கிராம நிர்வாக அலுவலராக புகழேந்தி என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரிடம் அய்யப்பன் நாயக்கன்பேட்டை கிராமத்தை சேர்ந்த வேல்முருகன், தன்னுடைய நிலத்தை அளவை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்.
சிக்கினார்: அதற்கு புகழேந்தி ரூ.2000 லஞ்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.. தன்னுடைய சொந்த நிலத்தை அளப்பதற்கு, எதற்காக லஞ்சம் தர வேண்டும் என்று நினைத்த வேல்முருகன், விஏஓ வேல்முருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புகழேந்தியிடம் வேல்முருகன் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் புகழேந்தியை கையும் களவுமாக கைது செய்தனர். தற்போது அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையையும் நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசு: லஞ்ச புகார்களை களைவதற்கான முயற்சியில் தமிழக பதிவுத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அத்துடன், போலி பத்திரங்கள் நடமாட்டத்தை குறைக்கவும், லஞ்ச நடமாட்டத்தை குறைக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறது. எனினும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கையும் பெருகி வருவது, பொதுமக்களுக்கு கவலையை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications