”தம்பி.. ப்ளீஸ் இறங்கு” அரியலூர் பிரசாரத்தின் போது திடீரென பதறிய விஜய்.. தவெக தொண்டரால் பரபரப்பு
அரியலூர்: திருச்சியில் மக்கள் சந்திப்பை நடத்திய விஜய் தொடர்ந்து அரியலூரில் மக்களை சந்தித்து பேசினார். பிரச்சார வாகனத்தின் மேல் நின்று பேசிக்கொண்டிருந்த போது அங்கு இருந்த கம்பி ஒன்றில் தவெக தொண்டர் ஒருவர் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் ஏறினார். இதைப்பார்த்து பதறிய விஜய், தம்பி ப்ளீஸ் இறங்கு என்று கூறினார். அங்கே இருந்த ஒருவரை பார்த்து.. பிரதர்.. அந்த நபர் இறங்கிய பிறகு.. தனது பேச்சை விஜய் தொடங்கினார். இதனால் கூட்டத்தில் சில வினாடிகள் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் முதன் முதலாக திருச்சியில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கியுள்ளார். மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் அளவிற்கு முதல் நாள் கூட்டமே அமைந்துவிட்டது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து மரக்கடை செல்லும் வரை தொண்டர்கள் நாலாபுறமும் விஜய்யின் பரப்புரை வாகனத்தை சூழ்ந்துகொண்டனர்.

ஸ்தம்பித்து போன திருச்சி
திருச்சி வந்த விஜய்க்கு உற்சாக வரவேற்பு கொடுத்ததோடு, அவரை நகர விடாமல் சூழ்ந்துகொண்டனர். இதனால் காலையில் 9.30 மணிக்கே சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த விஜய், அங்கிருந்து திருச்சி மரக்கடைக்கு செல்ல 4 மணி நேரம் ஆகிவிட்டது. மொத்தம் உள்ள 6 கிமீ தூரத்தை கடப்பதற்கு 4 மணி நேரம் ஆகியதால் திட்டமிட்டப்படி மக்கள் சந்திப்பை நடத்த முடியவில்லை. ஆனால் மதியம் 1.30 மணியளவில் திருச்சி மரக்கடையில் விஜய் மக்களை சந்தித்து பேசினார். இதன் காரணமாக திருச்சி நகரமே ஸ்தம்பித்து போய்விட்டது.
உங்க சொந்தக்காரனாகவே மாத்திட்டீங்க
தொடர்ந்து விஜய் அங்கிருந்து அரியலூருக்கு கிளம்பினார். அதே பிரசார வாகனத்தில் அமர்ந்தபடியே விஜய் சென்றார். அப்போதும் தொண்டர்கள் பைக்கில் விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து வந்தனர். திருச்சியில் இருந்து அரியலூர் நோக்கி விஜய்யின் வாகனம் புறப்பட்டு வந்தது. சரியாக 8.30 மணியளவில் தொண்டர்களின் உற்சாக வரவேற்புகளோடு திருச்சி காமராஜர் சாலையை வந்தடைந்தது.
இரவு நேரம் ஆனாலும் விஜய்யை பார்த்துவிட்டு தான் செல்ல வேண்டு என அதிக அளவிலான பெண்கள், குழந்தைகள் கூடி இருந்தனர். அப்போது பேசிய விஜய், "உங்களடைவிட.. உங்களின் பாசத்தை விட.. உங்களின் அன்பை விட இந்த உலகத்தில் எனக்கு வேற எதுவும் பெரியதாக தெரியவில்லை. சாதாரணமாக இருந்த இந்த விஜயை இவ்வளவு பெரிய உயரத்தில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டு இருக்கீங்க.. உங்கள் வீட்ல ஒருத்தராகவே மாத்திட்டீங்க.. உங்க சொந்தக்காரனாகவே மாத்திட்டீங்க..
தம்பி ப்ளீஸ் இறங்குப்பா
என்னங்க பெரிய பணம்.. பணம் வேணுங்கிற அளவுக்கு அளவுக்கு பாத்தாச்சு.. அரசியலுக்கு வந்து தான் நான் பணம் சம்பாதிக்க வேண்டுமா? அதுக்கு கொஞ்சம் கூட அவசியம் இல்லை.. எனக்கு எல்லாத்தையும், எல்லாமும் கொடுத்த உங்களுக்காக உழைப்பதை விட எனக்கு வேற என்ன வேலை? என்று விஜய் பேசிக்கொண்டு இருந்தார்.. அப்போது அங்கு இருந்த கம்பி ஒன்றில் தவெக தொண்டர் ஒருவர் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் ஏறினார். இதைப்பார்த்து பதறிய விஜய், தம்பி ப்ளீஸ் இறங்கு என்று கூறினார்.
அங்கே இருந்த ஒருவரை பார்த்து.. பிரதர்.. அவரை இறங்க சொல்லுங்கள்.. என்று கூறினார். அந்த நபர் இறங்கிய பிறகு.. தனது பேச்சை விஜய் தொடங்கினார். இதனால் கூட்டத்தில் சில வினாடிகள் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து விஜய் வழக்கம் போல் பேச்சை தொடர்ந்தார். மத்திய பாஜக அரசு மற்றும் திமுக அரசை விமர்சித்து விஜய் பேசினார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை.. ஜூலையில் கூடும் சட்டசபை? பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வரும்? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications