அரியலூர் அருகே இப்படியுமா? சென்னை பிசினஸ்மேன் வீட்டு பீரோவில் கிலோ கணக்கில் தங்க நகை.. யாரந்த பெண்?
அரியலூர்: அரியலூர், திருச்சி, சென்னை என பல்வேறு மாவட்டங்களில் நடந்த நகை திருட்டு சம்பவம், பொதுமக்களுக்கு அதிர்ச்சியையும், கிலியையும் தந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
சென்னை நுங்கம்பாக்கம், லேக் ஏரியா, 5வது குறுக்கு தெருவில் உள்ள 2 அடுக்கு மாடியில் சுலைமான் (67) என்ற தொழிலதிபர் வசித்து வருகிறார்.. இவர் துபாயில் வர்த்தக நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த டிசம்பர் 21ம் தேதி சென்னை வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரைக்கு சென்றுவிட்டு, 3ம் தேதி திரும்பி வந்துள்ளார்.

பீரோவில் 1.50 கிலோ தங்க நகைகள்
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 1.50 கிலோ தங்க நகைகள், 50 கேரட் வைர நகைகள், ரூ.10 லட்சம் ரொக்கம், 1 லேப்டாப், 1 ஆப்பிள் ஐ-போன் மற்றும் 3 விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் என மொத்தம் ரூ.2 கோடி மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசில் புகார் தந்ததையடுத்து, விசாரணை ஆரம்பமானது.. இறுதியில், வீட்டில் கார் டிரைவராக பணிபுரிந்த நேபாளம், சிந்துலியைச் சேர்ந்த சந்திர பரேயர் (31) என்பவர் மீது சந்தேகம் திரும்பியது..
இதையடுத்து நேற்று அவரை பிடித்து விசாரித்தபோது, நேபாளத்தைச் சேர்ந்த பெண் தோழி உள்பட சிலருடன் சேர்ந்து இந்த கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டதாகவும், இதற்கெல்லாம் அந்த பெண் தோழி மூளையாக செயல்பட்டதாகவும் கூறினார். ஆனால், அந்த தோழி அதற்குள் தலைமறைவாகிவிட்டார்.. அவரை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.
அரியலூரில் 48 சவரன் தங்க நகைகள்
அதேபோல, அரியலுார் மாவட்டம், கச்சிப்பெருமாள் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தா என்பவர் வீட்டிலும் தங்க நகை திருடு போயிருக்கிறது.. 100 நாள் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துபார்த்தால், பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் 48 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி, 1 லட்சம் ரூபாய் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ந்தார்..
உடனடியாக இதுகுறித்து உடையார்பாளையம் போலீசில் புகார் தந்ததையடுத்து, சிவகங்கை சண்முகநாதன், 27, மணிக்காளை, 29, சிவகாசி அழகுபாண்டி, 24, ராமநாதபுரம் தனசிங், 22, துாத்துக்குடி வெங்கடேசன், 24, ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டது உறுதியானது. இவரகள் 5 பேரையும் கைது செய்த போலீசார், 37 சவரன் நகை, 430 கிராம் வெள்ளி, 40,000 ரூபாய், திருட்டுக்கு பயன்படுத்தியகார், மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சியிலும் 7 சவரன் நகைகள் மாயம்
அதேபோல, நேற்றைய தினம், திருச்சி கே.கே நகரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருக்கிறார்கள்.. திருச்சி கே.கே நகர் ஐயப்பன் நகர், யாசர் தெரு பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணகுமார் மற்றும் மருந்தாகினி தம்பதியினர்.
இவர்கள் கடந்த 16ம் தேதி மாலை வீட்டை பூட்டி விட்டு திருவண்ணாமலை சென்றிருக்கிறார்கள். மறுநாள் வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்க பூட்டு உடைந்து கிடந்தது. பிறகு உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து மருந்தாகினி கே.கே நகர் போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள். இந்த புகாரின்பேரில் மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
தங்கம் விலை நாளுக்கு நாள் எகிறி வரும்நிலையில், ஒரேநாளில் பல்வேறு இடங்களில் தங்க நகை திருட்டு நடந்திருப்பது, மக்களுக்கு அச்சத்தை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications