சோழர்கள் குறித்த கண்காட்சியை பார்த்து வியந்து போனேன்.. அனைவரும் பார்க்க வேண்டும்.. பிரதமர் மோடி
அரியலூர்: கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி சோழபுரம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் வணக்கம் சோழமண்டலம் என்று தமிழில் கூறி உரையை தொடங்கினார் மோடி. சோழர்கள் குறித்த கண்காட்சியை பார்த்து வியந்து போனேன் என்றும், அனைவரும் இந்த கண்காட்சியை பார்வையிட வேண்டும் என்றும் மோடி கூறினார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு நேற்று வருகை தந்தார். நேற்று இரவு மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி வந்த பிரதமர் மோடி அங்கு பல்வேறு நலத்திடங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார். தொடர்ந்து நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வந்த பிரதமர் மோடி அங்கு ஓய்வு எடுத்துவிட்டு இன்று கங்கை கொண்ட சோழபுரம் வந்தார்.

மோடி ரோடு ஷோ
சோழபுரம் வரும்போது 3.8 கிமீ தூரம் ரோடு ஷோ மேற்கொண்டார். அப்போது சாலையில் இருபுறமும் திரண்டிருந்த பாஜக தொண்டர்கள் மோடிக்கு பூக்களை தூவி உற்சாகமாக வரவேற்றனர். இதற்கு பிறகு சோழபுரம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் மண்டபத்தில் வைக்கப்பட்ட ராஜேந்திர சோழன் கண்காட்சியில் கல்வெட்டுகளை பார்வையிட்டார். கோவில் வளாகத்தில் உள்ள சிற்பங்களையும் பார்வையிட்டார்.
கண்காட்சியை பார்த்து வியந்துபோனேன்
தொடர்ந்து ராஜேந்திர சோழன் முப்பெரும் விழா இளையராஜாவின் இசை நிகழ்ச்சியோடு தொடங்கியது. இதனை தொடர்ந்து ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். தொடர்ந்து வணக்கம் சோழமண்டலம் என்று தமிழில் கூறி உரையை தொடங்கினார் மோடி. சோழர்கள் குறித்த கண்காட்சியை பார்த்து வியந்து போனேன் என்றும், அனைவரும் இந்த கண்காட்சியை பார்வையிட வேண்டும் என்றும் மோடி கூறினார்..
பிரதமர் மோடி கூறியதாவது:- வணக்கம் சோழ மண்டலம்.. நமச்சிவாய வாழ்க.. நாதன் தாழ் வாழ்க.. இளையராஜாவின் இசை ஓர் ஆன்மிக அனுபவம்.. இது ராஜராஜ சோழனின் மண், காசியின் பிரதிநிதியான சிவ ஹோசம் புல்லரிப்பை தருகின்றது. இந்தியாவின் 140 கோடி மக்களுக்காகவும் இன்று பிரார்த்தனை செய்துள்ளேன். சோழர்கள் குறித்த கண்காட்சியை பார்த்து வியந்து போனேன். அனைவரும் இந்த கண்காட்சியை பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
அன்பே சிவம்
சைவ பாரம்பரியத்தில் தமிழ்நாடு முக்கிய மையமாக திகழ சோழர்கள் தான் காரணம். சைவ சித்தாந்தம் தீர்வளிக்கும் பாதை.. அன்பே சிவம்.. அன்பே சிவம் என்பது எவ்வளவு தொலைநோக்கான பார்வை.. திருமூலரின் அன்பே சிவம் என்கிற வழியில் தான் இன்றைய இந்தியா பயணித்துக்கொண்டு இருக்கிறது. களவாடப்பட்ட கலைச்சின்னங்களை மீட்டு இருக்கிறோம். தமிழகத்தை சேர்ந்த 36 கலைச்சின்னங்கள் மீட்கப்பட்டுள்ளது.
தந்தை மகன்களான ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் சக்திவாய்ந்த கடற்படையை வளர்த்தெடுத்தனர். சக்திவாய்ந்த அந்த கடற்படையை விரிவுபடுத்தியது ராஜேந்திரன். நாட்டின் வலிமையை ஆபரேஷன் சீந்தூர் வெளிப்படுத்தியது. இதனை நாடு முழுவதும் கொண்டாடுகிறார்கள். நம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், பதிலடி எப்படி இருக்கும் என்பதற்கு இந்த ஆபரேஷன் சிந்தூர் ஒரு உதாரணம் ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications