மனைவியை அடித்து கொன்ற கணவன்... விஷம் குடித்துவிட்டு வீடியோ ரீலிஸ் செய்ததால் பரபரப்பு
Recommended Video

அரியலூர் : பட்டபகலில் மனைவியை அடித்து கொன்ற கணவன், விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதோடு, நடந்த சம்பவத்தை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம் வெங்கனூர் அருகே உள்ள என்ற சன்னாமூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மணிகண்டன். அவரது மனைவி சுகன்யா. அவர்கள் இருவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தமது மனைவி சுகன்யாவின் நடத்தையில் மணிகண்டன் சந்தேகப்பட இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கம் போல வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வயலுக்கு செல்ல வேண்டும் என்று கூறி மனைவி சுகன்யாவை மணிகண்டன் அழைத்து சென்றுள்ளார். அப்போது தமது வயலில் சுகன்யாவை எதிர்பாராத வகையில் மணிகண்டன் உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினார்.
படுகாயமடைந்த சுகன்யா ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். அதனால் பயந்து போன மணிகண்டன் ஒரு கட்டத்தில் வயலில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு வெங்கனூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
போலீசில் சரணடையும் முன்பாக வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த மணிகண்டன், கொலை நடந்தது எப்படி? அதற்கு யார் காரணம் என்பன உள்ளிட்ட விவரங்களை தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, போலீசார் மணிகண்டனை சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வழக்கு பதிவு செய்து சுகன்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications