இறப்பிலும் இணை பிரியவில்லை.. இந்து-முஸ்லீம் நண்பர்கள்.. நண்பன் இறந்ததை கேட்டு அடுத்த நொடியே சோகம்!

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அடுத்தடுத்து இந்து முஸ்லிம் இணைபிரியாத நண்பர்கள் உயிரிழந்தனர். தந்தைகளைப் போன்று நாங்களும் இணைபிரியாமல் இருப்போம் என அவரது மகன்கள் தெரிவித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    இறப்பில்லை இணை பிரியவில்லை.. இந்து-முஸ்லீம் நண்பர்கள்.. நண்பன் இறந்ததை கேட்டு அடுத்த நொடியே சோகம் - வீடியோ

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜூபிலி ரோட்டில் அல்லா கோவில் அருகே வசித்து வருபவர் மகாலிங்கம். இவர் தெருவின் அருகே உள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார்.

    இவர் சிறிய டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வீட்டின் எதிர் புறம் வசித்து வருபவர் ஜெயிலா புதின். இவர் தெருவில் ஒரு ரைஸ்மில் நடத்தி வருகிறார்.

    சுபகாரியங்கள்

    சுபகாரியங்கள்

    இவர்கள் இருவரும் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக இணைபிரியா நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். மகாலிங்கம் வீட்டில் சுப காரியங்கள் நடந்தாலும் பண்டிகை காலங்களாக இருந்தாலும் ஜெயிலா புதீன் கலந்து கொள்வார். அதுபோல் ஜெய்லாபுதீன் வீட்டில் சுபகரியங்கள் பண்டிகை காலங்களிலும் மகாலிங்கம் கலந்து கொண்டு உணவு பதார்த்தங்களை இருவரும் பரிமாறிக் கொள்வார்கள்.

    பள்ளிபருவ நண்பர்கள்

    பள்ளிபருவ நண்பர்கள்

    இவர்கள் இரண்டு குடும்பங்களும் இரண்டாவது தலைமுறையாக ஒன்றாகவே இணைந்து நண்பர்களாகவே இருந்து வந்துள்ளனர். இதேபோன்று மகாலிங்கமும், ஜெய்லாபுதீனும் பள்ளிப் பருவ காலத்தில் இருந்து இணைபிரியாத நண்பர்களாக இதுவரை இருந்து வந்துள்ளனர் என கூறப்படுகிறது.

    உடல்நலக்குறைவு

    உடல்நலக்குறைவு

    இந்நிலையில் மகாலிங்கத்திற்கு திடீரென உடல்நிலை சரியில்லை என ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அடுத்த சிறிது நேரத்தில் ஜெய்லாபுதீனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்று சேர்த்தனர் அப்போது மருத்துவமனையில் இருவரும் எதிர் எதிரே உள்ள இருக்கையில் இருந்து சிகிச்சை பெற்று வந்தனர் இந்நிலையில், இதனைத் தொடர்ந்து ஜெயிலாபுதீன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

    உடல்கள் அடக்கம்

    உடல்கள் அடக்கம்

    இதனை எதிர் படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த மகாலிங்கத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் மகாலிங்கமும் இறந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து இருவரது உடல்களும் கொண்டுவந்து அவரவர்கள் வீட்டில் அவர் அவர்கள் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. இரு நண்பர்களும் இறந்தது இரு மதத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

    மகன்கள் பேட்டி

    மகன்கள் பேட்டி

    இதுகுறித்து இருவரது மகன்களும் கூறுகையில் எங்களது தாத்தா காலம் தொடங்கி எங்களது தந்தை காலம் வரை இரு குடும்பமும் மாமன் மைத்துனர் என்ற முறையில் ஒன்றாகவே வாழ்ந்து வந்துவிட்டோம் இதன் பிறகும் எங்களது காலம் மற்றும் சந்ததியினர் காலமும் தொடர்ந்து இரு குடும்பமும் இதேபோன்று ஒற்றுமையாகவே இருந்து இவ்வுலகிற்கு ஒரு முன் உதாரணமாக விளங்குவோம் என தெரிவித்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+