கங்கை நீரில் அபிஷேகம்.. மெய் மறந்து தியானத்தில் ஆழ்ந்த பிரதமர் மோடி!
அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். தனது தொகுதியான வாரணாசியில் இருந்து கொண்டுவரப்பட்ட கங்கை நீரால் கோயிலில் அபிஷேகம் செய்து, சில நிமிடங்கள் பிரதமர் தியானத்தில் ஆழ்ந்தார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். தூத்துக்குடி வந்த அவர், ரூ.4,800 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனையடுத்து திருச்சி வந்த அவர், இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வந்திருக்கிறார்.

மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள், அவரது தென்கிழக்கு ஆசியாவுக்கான கடல் பயணத்தின் ஆயிரமாவது ஆண்டு, மற்றும் கோவிலின் கட்டுமானத் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் முப்பெரும் விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, அபிஷேகத்திற்கு தான் கொண்டு வந்த கங்கை நீரை கொடுத்தார். இதனையடுத்து கோயிலில் சில நிமிடங்கள் தியானத்தில் பிரதமர் ஆழ்ந்தார். பின்னர் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பிரதமரின் கங்கைகொண்ட சோழபுரம் பயணம் பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications