அரியலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை டூ தைலாபுரம் வர ஒரு பய காசு கேட்டதில்ல.. நீ கேக்குறியா? டோல்கேட் ஊழியரை தாக்கிய பாமகவினர்

Google Oneindia Tamil News

அரியலூர்: அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை அடுத்துள்ள சுங்கசாவடியில் மேற்பார்வையாளராக இருந்த ஒருவரை பாமகவை சேர்ந்த 8 பேர் தாக்கியதாக சொல்லப்படுகிறது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த தத்தனூர் கீழவெளியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அருகே உள்ள சுங்கச்சாவடியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர் சுங்கச்சாவடியில் பணியில் இருந்தார்.

அப்போது வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தியுள்ளார். சுங்கக் கட்டணத்தை கேட்டுள்ளார். அப்போது காரில் இருந்த பாமக நகரச் செயலாளரான விஜி, பாமக கோவிந்தபுரம் நந்தகுமார், முத்து உள்ளிட்டோர் சேர்ந்து வெங்கடேசனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதாக தெரிகிறது.

உனக்கு 15..எனக்கு 14! 10ஆம் வகுப்பிலேயே 8 மாசம் கர்ப்பம்! 9ஆம் வகுப்பு மாணவன் கைது! அலறிய அரியலூர்! உனக்கு 15..எனக்கு 14! 10ஆம் வகுப்பிலேயே 8 மாசம் கர்ப்பம்! 9ஆம் வகுப்பு மாணவன் கைது! அலறிய அரியலூர்!

காரை நிறுத்துன

காரை நிறுத்துன

எதற்காக காரை நிறுத்துன என கேள்வி கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அவரை தாக்கியும் உள்ளனர். இதையடுத்து காயமடைந்த வெங்கடேசன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடையார்பாளையம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் எஸ்ஐ திருவேங்கடம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தைலாபுரம்

தைலாபுரம்

மேலும் சென்னை- தைலாபுரம் போகும் போது வரும் சுங்கச்சாவடிகளில் இதுவரை ஒருவரும் காசு கேட்டதில்லை, பாமக கொடிக்கே தடுப்பு போடறியா என கூறி வெங்கடேசனை கடுமையான வார்த்தைகளால் வசைபாடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்சி கொடியை காரில் கட்டியிருக்கும் அரசியல்வாதிகளிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள் காசு வசூலிக்க மாட்டார்கள்.

சுங்கச்சாவடி

சுங்கச்சாவடி

இது ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் மாறுபடும். சிலர் அதிமுக, திமுக கொடி கட்டிய கார்களுக்கு மட்டும் காசு கேட்காமல் அனுப்புவர். சிலர் எந்த கட்சி கொடியாக இருந்தாலும் காசு வாங்காமல் விட்டுவிடுவர். அது போல் சில சுங்கச்சாவடி ஊழியர்கள் சில கட்சி கொடிகளை பார்த்தால் கட்டணம் வசூலிப்பர்.

 கட்சி நிர்வாகிகள்

கட்சி நிர்வாகிகள்

அரசியல் கட்சி நிர்வாகிகள் சிலர் அண்மைக்காலமாக ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் செல்வது, டீக்கடையில் டீ குடித்துவிட்டு பணம் கேட்டால் ரகளை செய்வது. பிரியாணியில் எக்ஸ்டா லெக்பீஸ் இல்லை என சண்டையிடுவது உள்ளிட்டவற்றை செய்து வருகிறார்கள். இதுகுறித்து அவர்கள் மீது புகார் கொடுத்தால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்து அதே தவற்றைதான் மீண்டும் செய்கிறார்கள்.

குற்றச்சாட்டுகள்

குற்றச்சாட்டுகள்

மிக மோசமான குற்றச்சாட்டுகள் இருந்தால் அவர்கள் கட்சியை விட்டே நீக்கப்படும் அளவுக்கு கட்சித் தலைமை செல்கிறது. இது போன்று சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க வேண்டுமானால் அரசியல் கட்சித் தலைவர்கள் அவரவர் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரைகளை வழங்கி பொதுமக்களையும் பணி செய்யும் ஊழியர்களையும் துன்புறுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ள வேண்டும் என்பதே சமூகஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

English summary
PMK activist attacks and gives death threat to Tollgate Supervisor in Ariyalur. He gave complaint to Police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X