பேண்ட், டீ-ஷர்ட் அணிந்து அரிவாளுடன் போன சரோஜா.. மருமகனை சம்பவம் செய்த மாமியார்.. அரண்ட அரியலூர்

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: அரியலூர் அருகே பேண்ட், டீ-ஷர்ட் அணிந்து அரிவாளுடன் போன சரோஜா என்ற மாமியார், தனது மருமகனை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரை மாமியார் சரமாரியாக வெட்டியது ஏன் என்பது குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே வடுகர்பாளையம் மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் என்பவருடைய மனைவி சரோஜா . இவருக்கு வயது 53 ஆகிறது. பழனிவேல் மற்றும் சரோஜா தம்பதிக்கு 19 வயதில் பிரியா என்கிற மகள் இருந்தார் . இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த பால் வியாபாரியான 26 வயதாகும் தமிழரசனுக்கு தனது மகள் பிரியாவை மணம் முடித்து வைத்தார் சரோஜா.

Police arrested mother-in-law who assaulted son-in-law near Ariyalur

இதனிடயே தமிழரசன் பிரியா தம்பதி இடையே திருமணம் ஆன 3 மாதங்களிலேயே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தமிழரசன் தனது மனைவி பிரியாவை அடித்துக் கொலை செய்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் சரோஜா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து 3 மாதங்களிலேயே தமிழரசன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை தற்போது நடந்து வருகிறது-

இந்த நிலையில், தன் மகளை கொன்ற தமிழரசனை பழிவாங்குவதற்காக சரோஜா காத்திருந்தார். கடந்த செவ்வாய்கிழமை அன்று நள்ளிரவில் பேண்ட், டீ-ஷர்ட் அணிந்து கொண்டு கையில் அரிவாளுடன் ஆவேசமாக சரோஜா தமிழரசன் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அங்கு வெளியே கட்டிலில் படுத்திருந்த தமிழரசனை சரமாரியாக சரோஜா அரிவாளால் வெட்டினார். நடு மண்டையில் ஆவேசமாக வெட்டிய சரோஜா, மற்றும் வலது கையில் வெட்டினார். வெட்டியே இடது கை விரல்களை துண்டித்தார்.

இதனிடையே தமிழரசனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்து ஓடிவந்த அவரது தாயார் விமலா (45) சரோஜாவை தடுக்க முயன்றார். இதில் விமலாவையும் சரோஜா அரிவாளால் வெட்டினார். பின்னர் தமிழரசன், விமலா ஆகியோரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் தான் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த தமிழரசன், விமலா ஆகிய 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். இதனிடையே
உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள தமிழரசன் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கவலைக்கிடமான நிலையிலேயே தமிழரசன் இருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையில் ஆண்டிமடம் போலீசார் சரோஜாவை பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் பயன்படுத்திய அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே பேண்ட், டீ-ஷர்ட் அணிந்து மருமகனை அரிவாளால் வெட்டிய சரோஜா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

அப்போது சரோஜா கூறுகையில், நான் பார்த்து பார்த்துபாசமாக வளர்த்த எனது மகளை கொலை செய்த தமிழரசன் சிறையில் இருந்து 3 மாதங்களில் வெளியே வந்து விட்டான். எனவே எனது மகளின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி தமிழரசனை கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்காக அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் குறிகேட்டேன். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மொட்டை அடித்துக் கொண்டேன்.

மேலும், சேலையில் சென்று வெட்டினால் யாரேனும் என்னை அடையாளம் கண்டு பிடிக்கக்கூடும் என்பதால் எனது மகனின் பேண்ட், டீ-ஷர்ட் அணிந்து போனேன். தமிழரசன் வீட்டின் முன்பு கட்டிலில் படுத்து தூங்கியது யார்? என்பது எனக்கு உடனே தெரியவில்லை. இதனால் கட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்தவரிடம் போர்வையை இழுத்து தமிழரசன் தானா? என கேட்டேன். அதற்கு அவர் ஆமாம் என்று கூறினார். நீங்க யாரு? என கேட்டார். இந்த வார்த்தையை நான் கேட்டவுடன், நான் தான்டா உன் மாமியார் எனக்கூறி ஆவேசமாக தமிழரசனை சரமாரியாக வெட்டினேன். படுகாயம் அடைந்த தமிழரசன் பிழைக்க இனி வாய்ப்பு இல்லை" என சரோஜா ஆவேசமாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+