அரியலூர் அரசு மருத்துவமனையில் கழிவறை கோப்பையில் 'கால்கள் நீட்டி' என்ன அது.. ஆடிப்போக வைத்த இளம் பெண்
அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த கண்டராதீர்த்தம் கிராமத்தை சேர்ந்த லாரா என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை. இவர் 8 மாத கர்ப்பணியாக இருந்துள்ளார். அரியலூர் அரசு மருத்துவமனைக்கு தந்தையை கவனித்துக் கொள்ள வந்த போது, கழிவறையில் பெற்றெடுத்த குழந்தையை கழிவறை கோப்பையில் திணித்துள்ளார்.. இதை பார்த்து தூய்மை பணியாளர்கள் ஆடிப்போனார்கள். அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
திருமணத்தை மீறிய உறவில் பிறக்கும் குழந்தைகள், திருமணம் ஆகாமலேயே பிறக்கும் குழந்தைகளை, சில மோசமான தாய்மார்கள் செய்யும் செயல் கலங்க வைத்துள்ளது. ஆதலால் காதல் செய்வீர் படத்தை விடவும் மோசமான சம்பவங்கள் இந்த உலகில் அடிக்கடி நடக்கின்றன. அரியலூரில் நடந்த சம்பவம் நெஞ்சை உலுக்கி உள்ளது.

சிகிச்சைக்கு அனுமதி
அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த கண்டராதீர்த்தம் கிராமத்தை சேர்ந்த 53 வயதாகும் வேதியராஜ் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் லாராவுக்கு 20 வயது ஆகிறது. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக வேதியராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. கணவருக்கு பாயாசம் போட்ட தலைமை ஆசிரியை.. மாணவனுடன் சேர்ந்து ட்விஸ்ட்
கழிவறையில் பெண்
இவரை கவனிப்பதற்காக அவரது மனைவி, மகள் லாரா ஆகியோர் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். நேற்று அதிகாலை மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவறைக்கு லாராவும், அவரது தாயும் சென்றுள்ளார்கள். கழிவறைக்கு சென்ற லாரா தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்று எடுத்திருக்கிறார். பின்னர் அந்த பச்சிளம் குழந்தையை கழிவறை கோப்பையில் தலை உள்ளே செல்லுமாறு அழுத்தி இருக்கிறாராம். ஆனால் அந்த குழந்தையின் உடல் முழுவதும் உள்ளே செல்லாமல் கால்கள் மட்டும் வெளியில் நீட்டிக்கொண்டு இருந்திருக்கிறது.
வித்தியாசமான சத்தம்
இந்த நிலையில் மருத்துவமனையில் வேலை செய்யும் பெண் துப்புரவு பணியாளர் ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வித்தியாசமான சத்தம் கேட்டதால் அவர் சந்தேகம் அடைந்து மருத்துவமனையில் பணியில் இருந்த போலீசார் மற்றும் ஊழியர்களிடம் இதுபற்றி தெரிவித்தார். பின்னர் லாரா இருந்த கழிவறையின் கதவை திறக்குமாறு போலீசார் தெரிவித்தார்கள்.
கோப்பையில் குழந்தை
இதையடுத்து அவர் கதவை திறந்ததும் போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கழிவறை கோப்பையினுள் திணித்த நிலையில், பச்சிளம் பெண் குழந்தை இறந்து கிடந்ததை கண்டு அவர்கள் ஆடிப்போனார்கள். பின்னர் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கழிவறை கோப்பையை உடைத்து பச்சிளம் குழந்தையின் உடலை வெளியில் எடுத்தனர்.இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரசவ வலி
திருமணம் ஆகாத லாரா 8 மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். ஆனால் இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தெரியவில்லை என்று நம்ப முடியாத பதிலை கூறியிருக்கிறார். மருத்துவமனையில் உள்ள தனது தந்தையை கவனிக்க கடந்த 5 நாட்களுக்கு முன்பு லாரா வந்துள்ளார். அவருக்கு நேற்று அதிகாலை திடீரென்று பிரசவவலி ஏற்பட்டதால் அவர் அங்குள்ள கழிவறைக்கு சென்றார்.
தாய் உடந்தை?
அப்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் அந்த பச்சிளம் குழந்தையை கழிவறையின் கோப்பையில் திணித்து கொன்றது விசாரணையில் கூறியுள்ளார். எனினும் 8 மாத கர்ப்பம் வெளியே தெரியவில்லை என்று கூறுவதை போலீசார் நம்பவில்லை.. பச்சிளம் குழந்தையை கொல்ல அவரது தாய் உடந்தையாக இருந்தாரா? என்ற கோணத்திலும், திருமணம் ஆகாத லாரா கர்ப்பம் அடைய யார் காரணம்? என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications