முனியப்பன் கேட்ட கேள்வி.. கொந்தளித்து கொலை செய்து கதையை முடித்த பழனிச்சாமி, மாரியம்மாள்!

கணவனை தந்தையுடன் சேர்ந்து கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    முனியப்பன் கேட்ட கேள்வி.. கொந்தளித்து கொலை செய்த பழனிச்சாமி, மாரியம்மாள்!- வீடியோ

    அரியலூர்: கணவன் அந்த கேள்வியை கேட்டதால் ஆத்திரம் அடைந்த மனைவியும், மாமனாரும் அவரை கொன்றே குழிதோண்டி புதைத்தே விட்டனர்!

    அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி காட்டூரை சேர்ந்தவர் முனியப்பன். 35 வயது. மாமன் மகள் மாரியம்மாளை இவர் காதலித்து 12 வருடங்களுக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டார்.

    பொதுப்பணித்துறையில் வேலை பார்க்கும் முனியப்பனுக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் உண்டு. தண்ணி அடித்துவிட்டால் மனைவியை அடித்து உதைக்கும் பழக்கமும் உண்டு. எப்பவுமே சண்டை, தகராறில் வெறுத்து போன மாரியம்மாள் அம்மா வீட்டுக்கு கோபித்து கொண்டு வந்துவிட்டார்.

    தகராறு

    தகராறு

    கடந்த மாதம்தான் மாரியம்மாளின் அண்ணன் மணிவண்ணன் நோய்வாய்பட்டு இறந்துவிட்டார். அந்த துக்க நிகழ்ச்சிக்கு முனியப்பன் வரவில்லை என தெரிகிறது. மேலும் கடந்த 21-ம் தேதி இரவு வழக்கம்போல் போதையில் முனியப்பன் மனைவியிடம் தகராறும் செய்துள்ளார்.

    சரமாரி தாக்குதல்

    சரமாரி தாக்குதல்

    "என் அண்ணன் சாவுக்கு கூட வராத நீ இப்போது ஏன் வந்தாய்" என்று மாரியம்மாள் கேட்க, பதிலுக்கு முனியப்பன் பதில் சொல்ல.. வாய்த்தகராறு முற்றிவிட்டது. மேலும் மனைவி மாரியம்மாளையும், அவரது அப்பா பழனிசாமியையும் தொடர்புபடுத்தி முனியப்பன் பேசி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாமனார் பழனிசாமி முனியப்பனை சரமாரியாக தாக்கியுள்ளார்.

    குழி தோண்டினர்

    குழி தோண்டினர்

    இதில் முனியப்பன் பலத்த காயமடைந்து உள்ளார். துடிதுடித்து நிலையிலிருந்த முனியப்பனை ஒரு கயிற்றால் கழுத்தை நெறித்து மாமனாரும், மனைவியும் கொலை செய்து உள்ளனர். இரவோடு இரவாக வீட்டின் பின்புறம் குழிதோண்டி அதில் முனியப்பனின் உடலை வைத்து எரித்து, அந்த இடத்தில் விறகுகளை போட்டு அடுக்கி வைத்துவிட்டனர்.

    ரகசிய தகவல்

    ரகசிய தகவல்

    அதன்பேரில் தனிப்பிரிவு போலீஸார் மாரியம்மாளிடமும், பழனிச்சாமியிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் முனியப்பனை கொன்று புதைத்ததை ஒப்புக் கொண்டதை அடுத்து மாமனார், மருமகளை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    கைது

    கைது

    அதன்பேரில் தனிப்பிரிவு போலீஸார் மாரியம்மாளிடமும், பழனிச்சாமியிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் முனியப்பனை கொன்று புதைத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து தந்தை, மகளை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+