நாயுடுவின் அடுத்த அதிரடி.. 2 ரயில் நிறைய தொண்டர்கள்.. நாளை டெல்லியில் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2 ரயில் நிறைய தெலுங்கு தேசம் தொண்டர்கள் டெல்லிக்கு வந்துள்ளனர்.

நாளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் டெல்லியில் அதிரடி போராட்டத்தில் இவர்கள் ஈடுபடவுள்ளனர். கடந்த 2014 -முதல் வளர்ச்சி நாயகனாக முன்னிறுத்தப்பட்ட மோடியின் நண்பராக இருந்தவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

ஆந்திராவின் வளர்ச்சிக்காக டெல்லியை அடிக்கடி முற்றுகையிட்டு வந்தவர் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால் பாஜக அரசு அசைந்து கொடுக்கவில்லை. இந்த நிலையில் வரும் தேர்தலில் பாஜகவை ஆட்சிக்கு வர விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் சந்திரபாபு நாயுடு எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் வேகம் காட்டி வருகிறார்.

டெல்லி முற்றுகை

டெல்லி முற்றுகை

இந்நிலையில் இன்று ஆந்திரா வரும் மோடிக்கு ஆந்திராவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படவும் திட்டமிட்டுள்ள அதே வேளையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு நாளை டெல்லியில் பிரமாண்டமான போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக ஆந்திராவில் இருந்து இரண்டு ரெயில்களில் ஆந்திர மக்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இன்று காலை டெல்லியை வந்தடைந்த அவர்கள் நாளை 11 -ம் தேதி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்.

பெரும் போராட்டம்

பெரும் போராட்டம்

நாளை நடைபெறவுள்ள இந்த போராட்டத்தில் பல கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆந்திர அரசே பொது மக்களை அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளது. இரண்டு ரயில்களை வாடகைக்கு எடுத்த அரசு அதற்காக சுமார் ஒன்றேகால் கோடி செலவில் இரு ரயில்களை வாடகைக்கு அமர்த்தியுள்ளது.

2 ரயில்களில் வந்தனர்

2 ரயில்களில் வந்தனர்

நாளை நடைபெறவுள்ள இந்த போராட்டத்தில் பல கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆந்திர அரசே பொது மக்களை அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளது. இரண்டு ரயில்களை வாடகைக்கு எடுத்த அரசு அதற்காக சுமார் ஒன்றேகால் கோடி செலவில் இரு ரயில்களை வாடகைக்கு அமர்த்தியுள்ளது.

2 ரயில்களில் வந்தனர்

2 ரயில்களில் வந்தனர்

இந்த இரு ரயில்களும் நேற்று ஆந்திராவின் அனந்தாபூர் மற்றும் ஸ்ரீகாகுளம் பகுதிகளிலிருந்து புறப்பட்டு இன்று காலை டெல்லி வந்தடைந்துள்ளது. இந்த போராட்டத்தில் ஆந்திர மக்கள் மட்டுமல்லாது பல கட்சித் தலைவர்கள், தெலுங்கு தேசம் கட்சியினர், நாடு முழுவதிலுமிருந்து சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

அதிரடி அஸ்திரம்

அதிரடி அஸ்திரம்

மோடி இன்று ஆந்திராவுக்கு வரும் நிலையில் சந்திரபாபுவின் இந்த போராட்டம் பாஜகவுக்கு எதிரான அடுத்த அஸ்திரமாக பார்க்கப்படுகிறது. இந்தப் போராட்டத்தின் மூலம் டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க நாயுடு திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி திடீர் போராட்டத்தின் மூலம் நாட்டை திரும்பி பார்க்க வைத்தது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+