For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

‘ஓபிஎஸ்-இபிஎஸ் தூண்டுதலில் தாக்கினர்’ தாக்கப்பட்ட அதிமுக தொண்டர் புகார்: 12 பேர் மீது போலீஸ் வழக்கு

Google Oneindia Tamil News

அதிமுக உட்கட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யவந்த தொண்டரை தாக்கிய விவகாரத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் உள்ளிட்டோர் மீது தாக்கப்பட்டவர் அளித்த புகாரில் 10 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கர்நாடகாவில் பரபரப்பு.. ஓமிக்ரான் கண்டறியப்பட்ட நபருடன்.. தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா உறுதிகர்நாடகாவில் பரபரப்பு.. ஓமிக்ரான் கண்டறியப்பட்ட நபருடன்.. தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா உறுதி

 அதிமுக உட்கட்சித்தேர்தல்

அதிமுக உட்கட்சித்தேர்தல்

அதிமுகவில் நிலவும் பிரச்சினைகளை களைய கடந்த 3 நாட்களுக்கு முன் செயற்குழு கூடி கட்சி விதியில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன்படி கட்சியில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்றாக போட்டியிடுவார்கள் அவர்களை ஒற்றை வாக்கின் அடிப்படையில் கட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்வர் என திருத்தப்பட்டது. தேர்தல் டிச.7 அன்று நடக்கும் வேட்பு மனுதாக்கல் 3,4 தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

 வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் இல்லை வந்தவருக்கும் அடி உதை

வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் இல்லை வந்தவருக்கும் அடி உதை

வேட்புமனு தாக்கல் நேற்று காலை தொடங்கிய நிலையில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வராத நிலையில் ஓட்டேரியைச் சேர்ந்த எம்ஜிஆர் காலத்து தொண்டர் ஓம்பொடி பிரசாத் சிங் (71) என்பவர் வேட்புமனுவை வாங்க வந்தார். அவரிடம் உரிய தகுதி இல்லாததால் திருப்பி அனுப்பினர்.

 தாக்குதல் போலீஸில் புகார்

தாக்குதல் போலீஸில் புகார்

வெளியே வந்த அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க தயாரானபோது தாக்கப்பட்டார், வாசல்வரை அவரை துரத்திச் சென்று தாக்கினர். போலீஸார் அவரை மீட்டு அழைத்துச் சென்றனர், உடனடியாக ராயப்பேட்டை காவல் நிலையம் சென்ற அவர் ஓபிஎஸ், இபிஎஸ் தூண்டுதலின்பேரில் அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் தன்னை தாக்கியதாக புகார் அளித்தார்.

 புகாரின்பேரில் வழக்குப்பதிவு

புகாரின்பேரில் வழக்குப்பதிவு

அவரது புகாரைப்பெற்ற போலீஸார் அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம், மனோகரன் உள்ளிட்ட 12 பேர் மீது 143,148,341,323,427 5 IPC பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

 இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

ஓம்பொடி பிரசாத் சிங் என்பவர் காவல்நிலையம் வந்து கொடுத்த புகார் சம்மந்தமாக மேற்படி குற்றவழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 143 சட்டவிரோதமாக கூடுதல் , 148 ஆயுதங்களுடன் கூடி கலகம் விளைவித்தல் , 323 சிறு காயம் ஏற்படுத்துதல் , 341 சட்டவிரோதமாக தடுத்தல், 427 தாக்குதல் நடத்தி சேதத்தை விளைவித்தது ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட யாரும் கைது செய்யப்படவில்லை.

English summary
Attack on AIADMK volunteer who came to file nomination: Police file case against 12 persons
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X