உச்சாணிக்கு ஏறிய வாழைப்பழம்.. 1 கிலோ வாழைப்பழம் இவ்ளோ? மிரண்ட மக்கள்.. வாழைப்பழம்கூட நம்மை மிரட்டுதே
பெங்களூரு: தக்காளி உட்பட காய்கறிகளின் விலைகள் அடுத்தடுத்து உயர்ந்துள்ள நிலையில், வாழைப்பழங்களின் விலையும் திடீரென உயர்ந்துவிட்டது பொதுமக்களை கவலை கொள்ள வைத்து வருகிறது.
தக்காளியின் வரத்து குறைவு மற்றும் காலநிலை உள்ளிட்ட காரணங்களினால் தக்காளி விலையானது, தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் தக்காளி விலை எகிற ஆரம்பித்தது.. கிலோ ரூ.120, 140 வரை உயர்ந்தது..

விலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் நிறைய முயற்சிகளை மேற்கொண்டது.. முதல் கட்டமாக 67 பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்கப்பட்டது.
ரேஷன் கடைகளில் தக்காளியை வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் தக்காளி விலை எப்போது குறையும் என்று பொதுமக்கள் காத்திருந்தனர். தற்போது, கோயம்பேட்டில் கிலோ ரூ.50 க்கு நாட்டு தக்காளி விற்பனை செய்யப்பட்டது...
விலை உயர்வு: தக்காளி விலை ஓரளவு குறைய ஆரம்பித்துவிட்டதால், பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட நினைத்தனர்.. ஆனால், அதற்குள் வெங்காயத்தின் விலை எகிறி ஆரம்பித்துவிட்டது.. ரூ.35 ஆக விற்பனையாகிறது.. அதிலும், சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 60 க்கு விற்பனையாகிறது. இப்போது வாழைப்பழத்தின் விலையும் உயர்ந்துவிட்டதாம்..
வாழைப்பழங்கள்: பெங்களூரில் உள்ள பின்னிபேட்டை சந்தைக்கு, கடந்த மாதம் தினமும் 1500 குவிண்டால் வந்துகொண்டிருந்த வாழைப்பழ வரத்து, இப்போது, படக்கென 1000 குவிண்டால்களாக குறைந்துவிட்டதாம். பெங்களூரு வரும் வாழைப்பழங்கள் அங்கிருந்து தும்கூர், ராமநகரா, சிக்பள்ளாப்பூர், ஆனேக்கல், பெங்களூரு ரூரல் ஆகிய பகுதிகளுக்கு வினியோகிக்கப்படும்நிலையில், பல இடங்களில் வாழைப்பழ விலை அதிர வைத்து வருகிறது.
கிலோ வாழைப்பழத்தின் விலை கிலோ ரூ.100 ஆக உயர்ந்துள்ளது.. வாழைத்தார் வரத்தும் அவ்வளவாக இல்லாததால், வாழைத்தார் விலையும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் சொல்கிறார்கள்.
அதிர்ச்சி: இனிமேல்தான் பண்டிகைகள் வரப்போகின்றன.. பண்டிகை நேரத்தில் வாழைப்பழங்கள் மிகவும் அவசியமானவை.. இப்போதே வரத்து குறைவு என்றால், இனி வரும் காலங்களில் வாழைப்பழத்துக்கு திண்டாட்டமாகிவிடுமே, விலையும் உயர்ந்துவிடுமே என்று வியாபாரிகள் விழிபிதுங்கி உள்ளார்கள். ஒரு கிலோ வாழைப்பழம் என்றால், கிட்டத்தட்ட 7 பழங்கள்தான் கிடைக்கும். 7 பழங்களுக்கு 100 ரூபாயா? என்று பொதுமக்களும் கலங்கி கேட்கிறார்கள்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications