சகோதரனாலேயே பாதுகாப்பு இல்லை.. 14 வயது சிறுமி கர்ப்பம்! செல்போனால் வந்த வினை.. பெற்றோர்களே உஷார்!
பெங்களூர்: கர்நாடகாவில் செல்போனில் ஆபாச படம் பார்த்து சொந்த தங்கையையே 14 வயது அண்ணன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இணையதளம் என்பது பெரிய கடல். அதை பயன்படுத்த பெரியதாக எந்த அனுபவமும் தேவைப்படுவதில்லை. இருப்பினும் சிறார்கள் செல்போன் மூலம் இணையத்தை அணுகும் போது இந்த விபரீதங்கள் பெரும் பூகம்பமாக வெடிக்கின்றன.

அப்படி ஒரு சம்பவம்தான் பெங்களூரின் பாகலகுண்டே பகுதியில் நடந்திருக்கிறது. இந்த பகுதியில் வசித்து வந்த தம்பதியினருக்கு 14 வயதில் ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் இருந்திருக்கின்றனர். இவர்களின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பும் வரையில் இவர்கள் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார்கள். எனவே பொழுதை கழிக்க பெற்றோர் இவர்களிடம் செல்போனை கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.
இப்படி இருக்கையில், சிறார்கள் இருவரும் செல்போனில் ஆபாச படங்களை பார்த்து வந்திருக்கிறார்கள். இதன் விளைவாக, தனது தங்கையை மிரட்டி 14 வயது அண்ணன் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்திருக்கிறார். தொடக்கத்தில் இந்த விஷயம் வெளியில் தெரியவில்லை. 3 மாதங்கள் கழித்து சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. எனவே, அவரை மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றிருக்கிறார்கள்.
அப்போதுதான் இந்த விஷயம் வெளியில் தெரிந்திருக்கிறது. இதனையடுத்து பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்கள். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் கர்ப்பத்திற்கு காரணம், உடன் பிறந்த அண்ணன்தான் என்பதை உறுதி செய்திருக்கின்றனர். எனவே, சிறுவனை கைது செய்து சிறார் கூர் நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது இந்த சம்பவம் பல்வேறு விவாதங்களையும் கிளப்பியிருக்கிறது. மாறிவரும் சூழல்கள் குழந்தைகள் பராமரிப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
வாழ்வதற்கு பொருளாதாரம் முக்கியம். ஆனால், நல்ல குடும்ப சூழலை உருவாக்க பலமான பொருளாதாரம் தேவையாக இருக்கிறது. சமூக பாதுகாப்பில்லாத வேலை சூழல், அரசு பணிகள் ஒப்பந்த பணிகளாக மாற்றப்பட்டது உள்ளிட்டவை உழைப்பின் தேவையை அதிகரித்திருக்கிறது. எனவே பெற்றோர்கள் முழுக்க முழுக்க அதில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இது குழந்தை வளர்ப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. குழந்தைகளை எப்படி கையாள்வது என தெரியவில்லை. அல்லது குழந்தைகளை வளர்க்க போதுமான நேரத்தை இந்த வாழ்க்கை சூழல் பெற்றோர்களுக்கு கொடுப்பதில்லை.
எனவே குழந்தைகளை சமாளிக்க பெற்றோர்கள் செல்போனை பயன்படுத்துகிறார்கள். இங்குதான் குழந்தைகளின் எண்ண ஓட்டங்களில் பெரும் தாக்கம் ஏற்படுகிறது. செல்போன் கொடுத்துவிட்டால் குழந்தைகள் நம்மை தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். குழந்தைகளும் அப்போதைக்கு அமைதியாகி விடுகின்றனர்.
ஆனால் செல்போன்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை பெற்றோர் உணர்வதில்லை. குழந்தைகள் போனை கையில் எடுத்தவுடன் முதலில் யூடியூபைதான் ஓபன் செய்கிறார்கள். இதில் கவர்ச்சிகரமான ஏராளமான வீடியோக்கள் இருக்கின்றன. இது குழந்தைகளின் குறிப்பாக சிறார்களின் பாலியல் உணர்வை தூண்டுகிறது. எனவே மேலும் அதுபோன்ற வீடியோக்களை நோக்கி அவர்களை நகர்த்துகிறது.
யூடியூப் தவிர இன்ஸ்டாகிராம், பேஸ்புக் வீடியோஸ் என அனைத்திலும் கவர்ச்சிகர வீடியோக்களுக்கு பஞ்சமில்லை. யூடியூபில் குழந்தைகள் மட்டும் பார்ப்பதற்கான ஆப்ஷன்கள் இருக்கின்றன. அதை ஆன் செய்துவிட்டால் கவர்ச்சிகர வீடியோக்கள் வராது. ஆனால் பேஸ்புக், இன்ஸ்டாவில் இதுபோன்ற வாய்ப்புகள் இருப்பதில்லை.
எனவே பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் செல்போனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள், சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications