இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது.. பாவம் கர்நாடக மக்கள்! தண்ணீரை காக்க 144 தடையா? வரலாறு காணாத பஞ்சம்
பெங்களூர்: வட கர்நாடக மாவட்டமான ராய்ச்சூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், தண்ணீரை பாதுகாப்பாக அணையில் இருந்து நகருக்குள் கொண்டு செல்வதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகாவின் வடக்கு மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு தலைதூக்கி இருக்கிறது. இதன் காரணமாக கால்வாய் வழியாக நகரத்துக்கு தேவையான தண்ணீரை ராய்ச்சூர் மாவட்ட நிர்வாகம் பெற உள்ளது. இந்த நிலையில் ஜூன் 17 ஆம் தேதி முதல் ஜூன் 27 ஆம் தேதி வரை ராய்ச்சூர் மாவட்ட நிர்வாகம் 10 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

துங்கபத்ரா அணையின் நீரை துங்கபத்ரா இடது கால்வாய் வழியாக ராய்ச்சூருக்கு கொண்டு செல்கிறது மாவட்ட நிர்வாகம். இந்த நிலையில் தண்ணீரை திறப்பதற்கு முன்பாக அதை பாதுகாப்பாக நகரத்துக்கு திருப்புவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது. அதன் அடிப்படையிலேயே இந்த 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது 5 நாட்களுக்கு ஒரு முறை கிருஷ்ணா நதியில் இருந்து ராய்ச்சூர் நகரத்துக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் பல்வேறு சிரமங்களை தவிர்க்க கால்வாய் வழியாக துங்கபத்ரா அணையில் இருந்து ராய்ச்சூர் நகரத்துக்கு தண்ணீர் கொண்டு வர மாவ்ட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. சுமார் 130 மைல்கள் தொலைவில் உள்ள துங்கபத்ரா அணையில் இருந்து ராய்ச்சூருக்கு நீர் கொண்டு வரப்பட்டது.
துங்கபத்ரா அணையில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் பங்காரப்பா கெரே அணையில் தேக்கி வைக்கப்படும். அதன்பின்னர் ராம்பூர் ஏரிக்கு அது திருப்பி விடப்படும். அதை தொடர்ந்தே ராய்ச்சூர் நகரத்துக்கு குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பப்படும். இதுகுறித்து துணை ஆணையர் எல்.சந்திரசேகர் நாயக் தெரிவிக்கையில், "பொறியாளர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்தினாலும், பொதுமக்கள் தண்ணீரை திருப்பி விடுவதற்கான வாய்ப்பு உள்ளது." என்றார்.
ராய்ச்சூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் குழந்தைகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். ராய்ச்சூரில் ரேகலமரடி கிராமத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில் 5 வயது குழந்தை கழிவு நீர் குடித்து உயிரிழந்தது. 30க்கும் அதிகமான மக்கள் வாந்தி எடுத்தும், வயிற்றுப் போக்கு ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications