"உல்லாச விருந்து".. பண்ணை தோட்டத்தில் இளம்பெண்கள்.. அதிரடியாக நுழைந்த போலீஸார்.. 150 பேர் கைது..!
கொரோனா விதிகளை மறந்து செயல்பட்ட 150 பேர் கைதாகினர்
பெங்களூரு: கொரோனா விதிகளை மறந்து, பண்ணை வீட்டில் உல்லாச விருந்தில் பங்கேற்ற இளம்பெண்கள் உட்பட 150 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.. இந்த சம்பவம் கர்நாடகத்தில் நடந்துள்ளது.
இந்தியாவில், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிஷா, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.. அந்த வகையில் கர்நாடகாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
எனவே, கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்திருந்தார்.. இதைதவிர பல்வேறு கட்டுப்பாடுகளும் அங்கு போடப்பட்டுள்ளன.

தொற்று
எனினும், ஹாசன் மாவட்டத்தில் தொற்று அதிகரித்தபடியே இருக்கிறது.. இந்த மாவட்டத்தில் வைரஸ் பரவலை தடுக்க சுகாதார துறையும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை கடந்த சில நாட்களாகவே எடுத்து வருகிறது. ஆனாலும், முடியவில்லை. பொதுமக்களில் சிலர், கொரோனா விதிகளை மறந்து அசால்ட்டாக இருந்து வருகின்றனர்..

நடவடிக்கை
அவர்கள் யார் என்பதை கண்காணித்து, அவர்கள் மீது அதிரடி நடவடிக்கையையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஹாசன் மாவட்டம் ஆலூர் தாலுகா ஹலவடே என்ற கிராமத்தில் ஒரு பண்ணை தோட்டம் அமைந்துள்ளது.. இந்த பண்ணை தோட்டத்தில் தினமும் விருந்து நடக்குமாம்.. அதாவது பாட்டு, டான்ஸ், மதுபானம், போதைப்பொருட்களுடன் உல்லாச விருந்து நிகழ்ச்சி நடந்து வந்துள்ளது..

அதிரடி
இந்த தகவல்தான், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாஸ் கவுடாவுக்கு கிடைத்தது. இதையடுத்து எஸ்பி தலைமையில் பண்ணை தோட்டத்துக்கு போலீசார் அதிரடியாக நுழைந்தனர்.. அங்கு ஒருத்தரும் கொரோனா விதிகளை கடைப்பிடிக்காததை கண்டனர்.. ஒருத்தரும் மாஸ்க்கும் போடவில்லை... இரவு நேரம் அதுபோன்ற விருந்துகள் நடப்பதற்கும் அனுமதி கிடையாது.

விசாரணை
இதை மதிக்காமல், கிட்டத்தட்ட 150 பேர், அந்த உல்லாச விருந்தில் பங்கேற்று போதையில் டான்ஸ் ஆடியும் பாட்டு பாடியும் கொண்டிருந்தனர்.. இதில் பல இளம்பெண்களும் அடங்குவர்.. இவர்கள் 150 பேரையும் போலீசார் பிடித்து அப்போதே அதிரடியாக கைது செய்தனர். அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடத்தி வருகிறார்கள்... இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications