6 மாதம் தான்! மொத்தமாக மாறும் பெங்களூர்.. மெயின் சிட்டிக்குள் இப்படி ஒரு திட்டமா? மாஸ் சம்பவம்
பெங்களூர்: பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை மாநகராட்சி செய்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது 18 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுரங்கச் சாலை அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தால் பெங்களூரில் காணப்படும் டிராபிக்குக்கு குட் பாய் சொல்லிவிடலாம் என்கிறார்கள் அதிகாரிகள்.
இந்தியாவில் சிலிக்கான் வாலி என்று அழைக்கப்படும் பெங்களூரில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இந்தியாவின் ஐடி தலைநகரம் என்றும் அழைக்கப்படும் பெங்களூர் உலக அளவில் அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களில் ஒன்றாக உள்ளது. ஐடி நிறுவனங்கள் அதிகம் நிறைந்துள்ள பெங்களூரில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இதனால், பெங்களூர் நகரில் ஆண்டுதோறும் மக்கள் தொகை என்பது உயர்ந்து கொண்டே செல்கிறது. தற்போதைய சூழலில் பெங்களூர் நகரின் மக்கள்தொகை 1 கோடியை தாண்டிவிட்டது. மக்கள் தொகைக்கு ஏற்ப அங்கு வாகன பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதனால், பெங்களூர் சிட்டிக்குள் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
பீக் நேரங்களில் இன்ச் பை இன்ச் ஆக வாகனங்கள் ஊர்ந்து செல்வதை காண முடியும். ஒவ்வொரு சிக்னல்களையும் கடப்பதற்குள் வாகன ஓட்டிகள் திண்டாடிப்போவார்கள். பெங்களூர் டிராபிக் நெரிசல் தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இதனால், பெங்களூர் நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் முயற்சிகளில் அம்மாநில அரசு இறங்கியுள்ளது.
அதில் குறிப்பாக நகரின் மையப்பகுதியில் 18 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுரங்க சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2025 ஜனவரி மாதத்தில் இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வரும் விதமாக செயல்படுத்தப்பட உள்ளதாம். BBMP கிரேட்டர் பெங்களூர் பெருநகர மாநகராட்சி இந்த பணியை தொடங்க திட்டமிட்டுள்ளது. ரு.8,100 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தோராயமாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.450 கோடி செலவு ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுரங்க சாலை பணிகள் பயன்பாட்டுக்கு வந்தால் ஹெப்பலில் இருந்து சென்ட்ரல் சில்க் ரோடு பகுதிக்கு வெறும் 20 - 25 நிமிடங்களில் சென்று விடலாம். தற்போது இந்த இடத்திற்கு செல்ல ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது.
சுரங்க சாலைகளில் இருந்து வெளியேறவும் சாலைகளை அணுகவும் 5 இடங்களில் பாயிண்ட்கள் அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. சென்ட்ரல் சில்க் போர்டு பகுதியில் கர்நாடக ஸ்டேட் ரிசர்வ் போலீஸ் (KSRP) குடியிருப்பு, லால்பக், பெங்களூர் கோல்ஃப் கிளப், பாலேஸ் கிரவுண்ட்ஸ் மற்றும் ஹெப்பலில் உள்ள எஸ்டீம் மாலுக்கு அடுத்து காலியாக இருக்கும் அரசின் காலியிடம் ஆகிய பகுதியில் என்ட்ரி மற்றும் எக்சிட் பாயிண்டுகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சுரங்க சாலையின் உயரம் 10 மீட்டர் கொண்டதாக இருக்கும் வகையில் கட்டமைக்கப்பட உள்ளதாம். 40 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த சாலையில் செல்ல முடியும். சாத்தியக் கூறு அறிக்கையின் படி, ஹெப்பலுக்கும் எஸ்டீம் மாலுக்கும் சென்ட்ரல் சில்க் போர்டுக்கும் இடையே 15 இடங்கள் மிக நெருக்கடியான இடங்களாக உள்ளன. எனவே இதற்கு சுரங்க சாலையே சிறந்த தீர்வு என்று பெங்களூர் மாநகராட்சியின் தலைமை என்ஜினீயர் பிஎஸ் பிரகலாத் கூறினார்.
"மேம்பாலங்கள் அமைத்தால் இதற்கு அதிகப்படியான மரங்களை வெட்ட வேண்டியிருக்கும். அதிக நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கும். மிக முக்கியமாக அடுத்த 3 - 4 ஆண்டுகளுக்கு டிராபிக் பாதிக்கப்படும்" என்றார். புதிதாக அமைக்கப்பட இருக்கும் சுரங்க சாலையில் வாகனங்கள் பயன்படுத்த கட்டணம் விதிக்கப்படும். எனினும், எவ்வளவு தொகை என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications