19 வயது திருப்பூர் மாணவி பெங்களூரில் கூட்டு பலாத்காரம்.. போதை மாத்திரை கொடுத்து அத்துமீறிய கொடூரர்கள்
பெங்களூர்: தமிழ்நாட்டில் திருப்பூரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் பெங்களூரில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். சொகுசு பங்களாவில் போதை மாத்திரை கொடுத்து இருவர் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்பெண் அளித்த புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒரு சொகுசு பங்களாவில், 19 வயது கல்லூரி மாணவி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவிக்குப் போதைப்பொருள் கொடுத்து இரண்டு இளைஞர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாணவி
பாதிக்கப்பட்ட மாணவி, தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் கடந்த ஐந்து மாதங்களாகப் படிப்புக்காக பெங்களூரில் வசித்து வந்ததாகவும் பெங்களூர் போலீசார் கூறியுள்ளனர்..
இந்த ஆண்டு ஜனவரி மாதம் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் வழியாகப் பாதிக்கப்பட்ட மாணவிக்கு டிக்ஸன் சாண்டோ (21) என்ற இளைஞர் அறிமுகமாகியுள்ளார். அதன் பிறகு, இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர். அவ்வப்போது இருவரும் மெசேஜ் செய்து வந்துள்ளனர். மேலும், சம்பவம் நடப்பதற்கு முன்னும் பல சந்தர்ப்பங்களில் பெங்களூரில் இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
என்ன நடந்தது!
இந்த சூழலில் தான் கடந்த பிப்ரவரி 14ம் தேதி இரவு கல்லூரி முடிந்ததும் அந்த மாணவி பனஷங்கரியில் நண்பர் ஒருவருடன் இரவு உணவு சாப்பிட்டுள்ளார். அப்போது டிக்ஸனிடம் இருந்து மாணவிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. வடக்கு பெங்களூருவில் உள்ள 'ரெக்ஸ் வில்லா' என்ற தனியார் இடத்தில் நடைபெறும் விருந்தில் கலந்து கொள்ளுமாறு டிக்ஸன் அவரை அழைத்துள்ளார்.
இதற்கு முன்பும் டிக்ஸனை சந்தித்துள்ளதால் அந்த மாணவியும் ஓகே சொல்லி இருக்கிறார். பிப்ரவரி 15ம் தேதி அதிகாலையில் நண்பர் ஒருவர், அந்த மாணவியை வில்லாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நிகில் (35) என்ற இரண்டாவது குற்றவாளியை மாணவிக்கு டிக்ஸன் அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் எல்லாமே நன்றாகவே போய்க் கொண்டு இருந்தது.
போதைப் பொருள்
இருப்பினும், கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அவர்களின் டோன் மாற ஆரம்பித்துள்ளது. மேலும், அந்த மாணவிக்கு பிங்க் கலரில் ஏதோ மாத்திரையைக் கொடுத்துள்ளனர். கட்டாயப்படுத்தி அந்த மாத்திரையைச் சாப்பிட்ட சொல்லி வற்புறுத்தியுள்ளனர். அந்த மாத்திரையைச் சாப்பிட்ட உடனேயே நிலைகுலைந்ததாகவும், மயக்கம் ஏற்பட்டு சுயநினைவை இழந்ததாகவும் அந்த மாணவி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மாணவி சுயநினைவை இழந்த சூழலில், பங்களாவின் ஒரு அறையில் அவரை இரு கொடூரர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.. சம்பவத்தின்போது தனக்கு ஓரளவுக்குச் சுயநினைவு திரும்பியதாகவும், அதன் பிறகு அந்த அறையிலேயே தான் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் போலீசாரிடம் அந்த மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
மிரட்டல்
இந்தச் சம்பவத்தை வெளியே யாரிடமாவது கூறினாலோ அல்லது போலீசாரை அணுகினாலோ கொலை செய்து விடுவதாகக் குற்றவாளிகள் மிரட்டியதாகவும் மாணவி கூறியுள்ளார். பின்னர், குற்றவாளிகள் அவரை ஒரு மால் அருகே இறக்கிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களின் மிரட்டல் காரணமாகவே உடனடியாக போலீசிஸ் புகாரளிக்கவில்லை என்று மாணவி தெரிவித்தார். மேலும், இந்தச் சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் இதற்காகப் பிப்ரவரி 17ம் தேதி பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு பிறகே தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து சகோதரருக்குத் தகவல் தெரிவித்ததாகவும், அவர் சொன்னதாலேயே புகார் அளித்ததாகவும் அந்த மாணவி குறிப்பிட்டார்.
கைது
மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் டிக்ஸன் சாண்டோ மற்றும் நிகில் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து அடுத்தகட்ட விசாரணை நடந்து வருகிறது.
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
‘பப்ஜி' கேமால் சிதைந்த குடும்பம்.. தந்தை - அக்காளை கொன்ற இளைஞர்.. தாய் உயிருக்கு போராட்டம் -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம்












Click it and Unblock the Notifications