அதிகாலையில் தீப்பற்றி எரிந்த ஸ்லீப்பர் பேருந்து.. 20 பேர் உடல் கருகி பலி! கர்நாடகாவில் சோகம்!
பெங்களூர்: கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில், இன்று அதிகாலை தனியார் பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியது. லாரியுடன் மோதியதில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சித்ரதுர்கா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை-48-ல் சென்று கொண்டிருந்த இந்த தனியார் பேருந்து, எதிர்பாராத விதமாக லாரியுடன் மோதி திடீரென தீப்பற்றியது. அடுத்த சில நிமிடங்களிலேயே பேருந்து முழுவதுமாக தீ பரவியது. இது ஸ்லீப்பர் பேருந்து என்பதால், உள்ளே உறங்கிக்கொண்டிருந்தவர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை. எனவே 12 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலரும் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்திருக்கிறது.

விபத்து நடந்தது எப்படி?
அதிகாலை 2:30 மணியளவில் எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த லாரி ஒன்று, திடீரென தடுப்பை உடைத்துக்கொண்டு பேருந்து மீது மோதியிருக்கிறது. இதனையடுத்து பேருந்தின் டீசல் டேங்க் சேதமடைந்திருக்கிறது. இதுவே பேருந்து தீப்பற்ற காரணமாக அமைந்திருக்கிறது. பேருந்தின் முன்புறம் லாரி மோதியதால், உள்ளே உறங்கிக்கொண்டிருந்த பயணிகளால் வெளியேற முடியவில்லை. எமர்ஜென்சி எக்சிட் எங்கிருக்கிறது என் தேடுவதற்குள், பேருந்து தீப்பிடித்திருக்கிறது.
விபத்தை நேரில் பார்த்தவர்கள்
சீ பேர்ட் கோச் நிறுவனத்திற்குச் சொந்தமான அந்தப் பேருந்தில், 32 பேர் பயணித்திருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், "சீபேர்ட் பேருந்து எங்களைக் கடந்து சென்றவுடன், எதிரே வந்த ஒரு கண்டெய்னர் லாரி தடுப்பைத் தாண்டி ஸ்லீப்பர் பேருந்தின் டீசல் டேங்க் இருந்த பகுதிக்கு அருகிலேயே மோதியது" என்று சம்பவத்தை விளக்கியுள்ளார்.

பேருந்தில் பயணித்தவர்கள்
பேருந்தில் பயணித்த ஆதித்யா எனும் பயணி கூறுகையில், "அப்போது மக்கள் அலறிக் கொண்டிருந்தனர். விபத்து ஏற்பட்டவுடன் நான் கீழே விழுந்து, சுற்றிலும் தீப்பிடித்திருப்பதைக் கண்டேன். கதவைத் திறக்க முடியவில்லை. நாங்கள் கண்ணாடியை உடைத்து வெளியேற முயன்றோம். மற்றவர்களைக் காப்பாற்ற முயன்றாலும், தீ வேகமாகப் பரவியதால் அது கடினமாகிவிட்டது" என தெரிவித்திருக்கிறார்.
உயிரிழப்பு அதிகரிப்பு
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், உள்ளூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயை அணைத்து, காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர். பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்துக்கான சரியான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமா? அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமா? என பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் குறித்து விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடரும் சொகுசு பேருந்து விபத்துக்கள்
சொகுசு பேருந்துகள் விபத்தில் சிக்குவது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்னர், கடந்த அக்டோபர் மாதம் ஆந்திராவில் இதேபோன்று தனியார் பேருந்து ஒன்று விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிந்தது. இதில் 19 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஹைதராபாத்திலிருந்து பெங்களூர் நோக்கி இந்த பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. கர்னூல் பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
பேருந்தில் மொத்தம் 46 பேர் பயணம் செய்திருந்தனர். பேருந்து தீப்பிடித்தவுடன் அதிலிருந்த 19 பேர் வெளியேற முடியாமல் சிக்கி உயிரிழந்தனர். விபத்து அதிகாலை 3 மணியளவில் நடந்தது. பேருந்தில் செல்போன் பேட்டரிகள் இருந்ததே விபத்துக்கு காரணம் என்று சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications