பெண்களின் உள்ளாடையை திருடி அணிந்த இளைஞர்.. காரணத்தை கேட்டு அதிர்ந்த பெங்களூர் போலீஸ்.. ஷாக்
பெங்களூர்: பெங்களூரில் வீடு புகுந்து பெண்களின் உள்ளாடைகளை திருடி அதனை அணிந்து செல்போனில் வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த இளைஞர் பெண்களின் உள்ளாடைகளை அணிந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வரும் நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.
பெங்களூரின் ஹெப்பகோடியில் குடியிருப்பு பகுதிக்குள் இரவு நேரத்தில் நுழையும் நபர் பெண்களின் உள்ளாடைகளை திருடுவதும், அதனை அணிந்து செல்போனில் வீடியோ எடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வந்தது.

இந்த நபரின் இந்த செயல் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது. இதுதொடர்பாக போலீசார் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். அதன்பிறகு சிசிடிவி கேமராவில் பதிவான நபரின் உருவத்தை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு அந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையின்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. அதாவது கைதான நபரின் பெயர் அமுல் (வயது 23). கேரளாவை சேர்ந்த இவர் பெங்களூர் ஹேப்பகோடியில் வசித்து வருவதும் தெரியவந்தது. அவருக்கு பெண்களின் உள்ளாடைகளை திருடி அணியும் பழக்கம் இருந்து வந்துள்ளது. பெண்களின் உள்ளாடையை அணிந்தால் தனக்கு ஒருவிதமான போதை ஏற்படுவதை உணர்வதாகவும், இதனால் தொடர்ந்து அதனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் அவர் இரவு நேரங்களில் வீட்டின் பால்கனி மற்றும் முற்றத்தில் உலர வைக்கப்பட்டு இருக்கும் பெண்களின் உள்ளாடைகளை திருடி அணிந்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவரது வீட்டுக்கு சென்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் இருந்து பெண்களின் உள்ளாடைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது அந்த நபரின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இதுதொடர்பாக ஹெப்பகோடி போலீசார் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 303 (2) (திருட்டு), 329 (4)(வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல்), 79 (வார்த்தை, சைகை அல்லது அத்துமீறி நுழைந்து அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் கர்நாடகாவில் இப்படி நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 25 வயது நிரம்பிய சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர், மாணவிகளின் உள்ளாடைகளை திருடிய வழக்கில் துமகூரு போலீசாரிடம் சிக்கினார். விசாரணையில் அவர் பல வீடுகளில் பெண்களின் உள்ளாடைகளை திருடியது தெரியவந்தது. மேலும் அவர், ஆபாசபடம் பார்ப்பதற்கு அடிமையாகி இருப்பதும் தெரியவந்தது. அதன்பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூரில் நாளை மாபெரும் போராட்டம்.. தமிழர்களை தமிழில் அழைத்த காக்ரோச் ஜனதா பார்ட்டி சௌரவ் தாஸ்! -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications