40% கமிஷன்! பாஜக அவதூறு வழக்கில் ராகுல், சித்தராமையா, டிகே சிவக்குமாருக்கு சிக்கல்.. பறந்த சம்மன்
பெங்களூர்: 40 சதவீத கமிஷன் அரசு என்று பாஜக மீது அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்ப அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள 244 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மாதம் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியை பிடித்தது. பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது. இந்த தேர்தலில் ஜேடிஎஸ் கட்சி 19 தொகுதிகளிலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்னளர்.

இதையடுத்து கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்தது. முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவக்குமார் ஆகியோர் பொறுப்பேற்றனர். முன்னதாக கர்நாடகாவை ஆட்சி செய்த பாஜக மீது காங்கிரஸ் கட்சி சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
குறிப்பாக 40 சதவீத கமிஷன் தொகையை ஆளும் பாஜக அரசு பெறுவதாக காங்கிரஸ் தலைவர்கள் புகார்களை கூறினர். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சித்தராமையா, டிகே சிவக்குமார் உள்பட பல முன்னணி தலைவர்கள் இந்த குற்றச்சாட்டை மேடைக்கு மேடை முழங்கினர். அதோடு தேர்தல் நெருங்கிய நிலையில் பாஜகவுக்கு எதிராக 40 சதவீத கமிஷன் அரசு என பத்திரிகைகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர்.
இதையடுத்து பாஜகவின் மாநில செயலாளர் எஸ் கேசவபிரசாத் என்பவர் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். ராகுல் காந்தி, சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமாருக்கு ஆகியோருக்கு எதிராக அவர் மே மாதம் 9 ம் தேதி எம்பி, எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவில் காங்கிரஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார்.
மனுவில் ‛‛மே மாதம் 5ம் தேதி முக்கிய பத்திரிகைகளில் விளம்பரம் மூலம் பாஜக குறித்து தவறான பிம்பத்தை கட்டமைக்க காங்கிரஸ் முயன்றுள்ளது. அந்த விளம்பரத்தில் பாஜக 40 சதவீத கமிஷன் மூலம் ரூ.1.5 லட்சம் கோடியை 4 ஆண்டுகளில் சம்பாதித்துள்ளதாக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இதனால் இந்திய தண்டனை சட்டம் 499 (அவதூறு) மற்றும் இந்திய தண்டனை சட்டம் 500 (அவதூறுக்கான தண்டனை) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு மீது சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதையடுத்து சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க ராகுல் காந்தி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. மேலும் வழக்கு விசாரணையை ஜூலை 27 ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
ஏற்கனவே மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் ராகுல் காந்தி, கர்நாடகா முதல்வராக உள்ள சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டிகே சிவக்குமார் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications