அந்த மாமா ரூமுக்குள் அம்மாவை கூட்டிட்டு போனார்.. கழுத்தை நெரித்தார்.. சிறுவனின் பரபரப்பு வாக்குமூலம்
பெங்களூரு: "அந்த மாமா என் அம்மாவை அந்த ரூமுக்குள்ள கூட்டிட்டு போனாரு.. அம்மா தலையில் அடிச்சிட்டாரு.. அம்மாவின் புடவையால் கழுத்தையும் நெறிச்சிட்டார்.. மாமா உடனே ஓடிட்டார்" என்று 5 வயது சிறுவனின் வாக்குமூலம் 2 வருடம் கழித்து கொலையாளியை பிடிக்க உதவி உள்ளது.
கர்நாடக மாநிலம் சின்னயனாபால்ய கிராமத்தை சேர்ந்த தம்பதி தேவராஜ் - சுமலதா. இவர்களுக்கு 5 வயது மகன் உள்ளான்.
இந்நிலையில், சுமலதாவுக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அடிக்கடி நெஞ்சு வலி என்றும் சொல்லி வந்தார். ஆனால் போன செப்டம்பர் 18ம் தேதி வீட்டில் இறந்துகிடந்தார். வழக்கமான நெஞ்சுவலியால் தான் சுமலதா இறந்துவிட்டதாக நினைத்து, குடும்பத்தினரும் தகனம் செய்துவிட்டனர்.

தேவராஜ்
இப்போது சுமலதா இறந்து 2 மாசம் ஆன நிலையில், மனைவியை யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் தேவராஜுக்கு எழுந்துள்ளது. 5 வயது பையன், இவரிடம் பேசி கொண்டிருக்கும்போது, "அம்மாவை ஒரு மாமா அந்த ரூமுக்குள் கூட்டிட்டு போய் அடிச்சார்" என்று சொன்னதும் அதிர்ச்சி அடைந்தார் தேவராஜ்... அதனால் மகனையும் அழைத்து கொண்டு போலீஸ் ஸ்டேஷன் போய் நடந்ததை சொல்லி உள்ளார். போலீசாரிடம் அந்த சிறுவன் சொன்னதாவது:

புடவை
"ஒருநாள் வெங்கடேஷ் மாமா எங்க வீட்டுக்கு வந்தார். அவரும் அம்மாவும் அந்த ரூமுக்குள்ள போனாங்க.. அப்போ ரெண்டு பேரும் சத்தமா சண்டை போட்டுக்கிட்டாங்க.. அந்த மாமா என் அம்மா தலையில் அடிச்சிட்டார்.. அம்மாவின் புடவையால் கழுத்தையும் நெறிச்சிட்டார்.. அம்மா கீழே விழுந்துட்டாங்க.. அந்த மாமா உடனே ஓடிட்டார்" என்றான்.

விசாரணை
இதை கேட்டு போலீசாரே அதிர்ச்சி அடைந்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர். வெங்கடேஷுக்கும் சுமலதாவுக்கும் கள்ள உறவு இருப்பதாக அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் சொன்னார்கள். இதை பற்றி விசாரிக்கலாம் என்றால் வெங்கடேஷை ஊரில் காணோம்.. சுமலதா இறந்தபோதே ஆள் எஸ்.ஆகிவிட்டுள்ளார்.. அதனால், அவரை தீவிரமாக தேட ஆரம்பித்தபிறகு, இப்போது சிக்கிவிட்டார்.. கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

வாக்குமூலம்
'எனக்கும் சுமலதாவுக்கும் உறவு இருந்தது உண்மைதான்.. ஒரு கட்டத்தில் அதை நிறுத்திக்கலாம்ன்னு சுமலதா என்கிட்ட சொன்னாள்.. ஆனால் நான் ஒத்துக்கலை.. அதனால், வீட்டில் எல்லார்கிட்டயும் சொல்லிவிடுவேன் என அவள் என்னை மிரட்டினாள்.. அந்த ஆத்திரத்தில்தான் அவள் கட்டிய சேலையாலேயே கழுத்தை நெறித்து கொன்றேன். கொலை செய்ற ஆவேசத்தில் பக்கத்தில் பையன் இருக்கிறான் என்பதைகூட நான் கவனிக்கவில்லை" என்றார்.
பெண் உயிரிழந்த 2 மாதம் கழித்து, மகன் தந்த சாட்சிமூலம் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளது பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications