பெங்களூரில் உச்சக்கட்ட பரபரப்பு! ஒரே நேரத்தில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நடந்தது என்ன
பெங்களூர்: பெங்களூரில் ஒரே நேரத்தில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் உள்ள 7 பள்ளிகளுக்கு இன்று காலை மெயில் ஒன்று வந்துள்ளது. அதில் அந்த 7 பள்ளிகளிலும் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாகப் பெங்களூர் காவல் ஆணையர் கமல் பந்த் கூறுகையில், நகரில் உள்ள ஏழு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

போலீசார்
இதையடுத்து போலீஸ் குழுக்கள் மிக விரைவில் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். வெடிகுண்டு மிரட்டல் வந்த உடன் மாணவர்கள் அனைவரும் பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், மேலும், பள்ளி வளாகங்களில் வெடிகுண்டு சோதனையையும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார்
காலை 11 மணியளவில் 7 பள்ளிகளுக்கும் இந்த மெயில் வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆணையர் கமல் பந்த் மேலும் கூறுகையில், "மின்னஞ்சலின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கி உள்ளோம். மின்னஞ்சல் எங்கே இருந்து அனுப்பப்பட்டது என்பதைக் கண்டறிய முயல்கிறோம். இப்போது தான் விசாரணையைத் தொடங்கி உள்ளோம். விரைவில் கூடுதல் தகவல்களைக் கண்டறிவோம் என நம்புகிறோம்" என்றார்.

மின்னஞ்சல்
பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட அந்த மின்னஞ்சலில், "உங்கள் பள்ளியில் மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இது சும்மா ஜோக் இல்லை. உங்கள் பள்ளியில் மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக போலீசாரை அழைக்கவும். நூற்றுக்கணக்கான உயிர்கள் ஆபத்தில் உள்ளது. தாமதிக்க வேண்டாம், இப்போது எல்லாம் உங்கள் கையில் மட்டுமே உள்ளது!" என்று கூறப்பட்டுள்ளது.

மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகள்
1. டெல்லி பப்ளிக் பள்ளி, வர்தூர்
2. கோபாலன் சர்வதேச பள்ளி
3. புதிய அகாடமி பள்ளி
4. செயின்ட் வின்சென்ட் பால் பள்ளி
5. இந்தியன் பப்ளிக் பள்ளி, கோவிந்த்புரா
6.எபினேசர் சர்வதேச பள்ளி, எலக்ட்ரானிக் சிட்டி
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications