நடிகர் தர்ஷனுக்கு ஜெயிலில் சொகுசு.. வைரல் போட்டோ, வீடியோவால் சர்ச்சை.. 7 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட்
பெங்களூரு: கன்னட சினிமானவின் பிரபல நடிகரான தர்ஷனின் தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடாவை சோஷியல் மீடியாவில் சீண்டிய தனது ரசிகரை கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில் தர்ஷன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் சிறையில் சொகுசாக டீ கப்பை கையில் வைத்துக் கொண்டு அரட்டை அடிக்கும் போட்டோ பரவியது. இந்த விவகாரத்தில் 7 சிறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, நடிகர் தர்ஷன் சிறையில் இருந்து கொண்டு வீடியோ காலில் பேசிவரும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் தர்ஷன். இவரது தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடாவை சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சாமி என்பவரை கடத்திக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட ரேணுகா சாமி நடிகர் தர்ஷனின் தீவிரமான ரசிகர். தர்ஷன் தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். அவர் தனது மனைவியைப் பிரிந்ததற்கு பவித்ரா கவுடாதான் காரணம் என பவித்ராவைத் திட்டியும், ஆபாசமாகவும் ரேணுகா சாமி மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பவித்ரா தர்ஷனிடம் கூறிய நிலையில் அவரைக் கடத்தி சென்று கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்றத் தலைவர், பவுன்சர்கள் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், நடிகர் தர்ஷன் தூகுதீபா ஜெயில் வளாகத்தில் திறந்தவெளியில் நாற்காலியில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு கையில் டீ கப் மற்றும் சிகரெட்டுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவியது. தர்ஷன் அருகே ரௌடி வில்சன் கார்டன் நாகா மற்றும் மேலாளர் நாகராஜ் ஆகியோர் அமர்ந்துகொண்டு பேசிக் கொண்டிருக்கும் காட்சிகளும் அந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருந்தன.
இதுகுறித்து, ரேணுகா சாமியின் தந்தை காஷிநாத் ஷிவானா கௌத்ரு கூறுகையில், " எனது மகனின் கொலை வழக்கில் காவல் துறை மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், இந்தப் புகைப்படத்தை பார்த்தபின் அந்த நம்பிக்கை போய்விட்டது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
இந்நிலையில், நடிகர் தர்ஷனுக்கு ஜெயிலில் சொகுசான சலுகைகள் அளிக்கப்பட்ட விவகாரத்தில் 7 சிறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா கூறுகையில், சிறைத் துறை தலைமை இயக்குநரிடம் பேசியுள்ளேன். விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சிறைக் கண்காணிப்பாளர் உட்பட மூத்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.
தர்ஷன் மூவருடன் தேநீர் அருந்திக் கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததாக மாலை 4.30 மணியளவில் எனக்குத் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து,
சிறைத் துறை டிஜிபியிடம் பேசி சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். நள்ளிரவு 1 மணிக்கு மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் நடந்திருக்கக் கூடாது. ஏழு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
புகைப்படம் வெளியான விவகாரம் ஓய்வதற்குள் நடிகர் தர்ஷன் வீடியோ காலில் பேசும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தர்ஷன் ஒரு அறையில் அமர்ந்து கொண்டு சிரித்துக் கொண்டே பேசுகிறார். எதிர்தரப்பில் பேசுபவர் சாப்பாடு சாப்பிட்டீர்களா என்று கேட்கிறார். அதற்கு தர்ஷனும் தலையை ஆட்டி சாப்பிட்டதாகக் கூறுகிறார். இந்த வீடியோ தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டதாக காவல் துறை தகவல் வெளியாகி உள்ளது.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications