வன்கொடுமை செய்தாலும் சிரிச்சிக்கிட்டே இருக்கனும்..பிரஜ்வல் ரேவண்ணாவின் கொடூர முகம்! ஷாக் தகவல்
பெங்களூரு : கர்நாடகாவில் 300க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்து வைத்த பிரஜ்வல் ரேவண்ணா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் போது கூட பெண்கள் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என அவர் மிரட்டி கொடுமை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா, ஹலெநரசிப்புரா எம்.எல்.ஏ.வாக இருந்தவர். தற்போது கர்நாடகா சட்ட மேலவை உறுப்பினராக எம்.எல்.சி.யாக இருக்கிறார். கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் ஜேடிஎஸ் கூட்டணி வைத்த நிலையில் மீண்டும் ஹாசன் தொகுதியில் கட்சி சார்பில் போட்டியிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி அந்தத் தொகுதியில் தேர்தல் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளரிடம் பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி அடைந்தார். அதற்கு முன்னதாக பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் பரவியது.
பிரஜ்வல் ரேவண்ணா தங்கள் கட்சி பெண் நிர்வாகிகள், உதவி கேட்டு வரும் பெண்கள், மனு அளிக்க வரும் பெண்கள், அரசு அதிகாரிகள் என 300-க்கும் மேற்பட்டோரை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்து வைத்து, மீண்டும் மீண்டும் அந்த வீடியோவை காட்டி அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அவரது பெண் ட்ரைவில் சுமார் 2900க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களின் வீடியோக்கள் திடீரென வெளியானது. இதை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தேர்தலிலும் தோல்வி அடைந்தார். இதனையடுத்து ஜெர்மனியிலிருந்து கர்நாடகா திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணாவை, கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வரும் நிலையில் கடந்த மாதம் 2 குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின. பிரிஜ்வல் ரேவண்ணா மீது ஐந்து பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2144 பக்கம் கொண்ட இரண்டு குற்றப் பத்திரிகைகள் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல அதிர்ச்சி தரும் தகவல்களை போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
குறிப்பாக ரேவண்ணாவின் வீட்டில் வேலை செய்து வந்த பெண்மணியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரது மகளையும் பலாத்காரம் செய்வதாக மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் 1191 பக்கம் கொண்ட மூன்றாவது குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் அளித்த வாக்குமூலம் அடங்கியுள்ளது.
கடந்த 2020 முதல் 2023 வரை மூன்று ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு பிரஜ்வல் ரேவண்ணா உள்ளாக்கியுள்ளார். ஹெலெ நரிசிபுரா பகுதியில் உள்ள தனது சொகுசு வீட்டில் வைத்து அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட உள்ளாடை அணிய வைத்து தன்னை பலாத்காரம் செய்ததாகவும், வன்கொடுமை செய்யும் போது கூட தான் சிரித்த மாதிரி இருக்க வேண்டும் என துப்பாக்கி முனையில் பிரஜ்வல் ரேவண்ணா மிரட்டியதாக அந்த பெண் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
மேலும் இதை வெளியே சொன்னால் ஒவ்வொரு முறையும் தான் எடுத்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் என கூறி மிரட்டி இருக்கிறார். முதன்முதலாக நிகழ்ச்சி ஒன்றில் அந்த பெண்ணை பார்த்த பிரஜ்வல் ரேவண்ணா தொடர்ந்து தனது தங்கும் சொகுசு மாளிகைக்கு வரவழைத்து அவரை வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த நிகழ்ச்சியில் பிரஜ்வல் ரேவண்ணா கலந்து கொண்ட எம்எல்ஏ ஒருவரும் வாக்குமூலம் அளித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications