நடிகர் மாரிமுத்து செய்த அதே தவறு.. பெங்களூர் தம்பதி நடுரோட்டில் தவிக்க காரணம்.. யாருமே பண்ணாதீங்க
பெங்களூர்: இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்றபோது நடுரோட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடியுள்ளார் ஒருவர்.. அவரைகாப்பாற்ற அவரது மனைவி உதவி கோரி உள்ளார். சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக லிப்ட்கேட்டு தவித்தார். எந்த வாகன ஓட்டிகளும் கண்டுகொள்ளவில்லை.. அவர் தற்போது உயிருடனும் இல்லை.. மாரடைப்பு ஏற்பட்டால் உடனே ஆம்புலன்ஸ் வரவழைத்து செல்ல வேண்டும். அவர்களே வாகனம் ஓட்டி செல்லக்கூடாது. அந்ததவறு தான் பெங்களூர் தம்பதி தவிக்க காரணம் ஆகும்.
பெங்களூரு பனசங்கரி 3-வது ஸ்டேஜ் இட்டமடு பாலாஜி நகரை சேர்ந்த 34 வயதாகும் செங்கடரமணன் என்பவர் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வந்தார். அவருக்கு திருமணமாகி விட்டது. இவரது மனைவி பெயர் ரூபா. இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி அதிகாலை 3.30 மணி அளவில் வீட்டில் இருந்த போது வெங்கடரமணனுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து அவர் வாந்தி எடுத்திருக்கிறார். இதையடுத்து அவர் தனது மனைவி ரூபாவை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் கத்ரிகுப்பே ஜனதா பஜார் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு டாக்டர்கள் இல்லாததால் அருகில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு தம்பதி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்கள். அங்கு வெங்கட ரமணனுக்கு இ.சி.ஜி. எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்குள்ள டாக்டர்கள் அங்கு எந்த சிகிச்சையும் அளிக்காமல் உடனடியாக ஜெயதேவா மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு அனுப்பி வைத்துள்ளார்கள்.
இதனால் அவர்கள் ஆம்புலன்சில் ஜெயதேவா மருத்துவமனைக்கு செல்ல முடிவு செய்தனர். ஆனால் உடனடியாக அவர்களுக்கு ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. இதையடுத்து கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் ஜெயதேவா மருத்துவமனை நோக்கி விரைந்துள்ளனர். ஆனால் வழியிலேயே கதிரேனஹள்ளி பாலம் அருகே சென்ற போது 2-வது முறையாக வெங்கடரமணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகன சாலையோரம் நின்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு மோட்டார் சைக்கிளுடன் அவர் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.
அவரது மனைவி ரூபா சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியதும் கீழே விழுந்துவிட்டார். பின்னர் அவர் பதறியடித்தப்படி வெங்கடரமணன் அருகே சென்று அவரை மீட்டிருக்கிறார். மாரடைப்பு ஏற்பட்டதுடன் மோட்டார் சைக்கிளுடன் இழுத்து செல்லப்பட்ட வெங்கடரமணன் உயிருக்கு போராடியடி பரிதவித்துள்ளார்.
இதனால் தனது கணவர் உயிரை காப்பாற்ற ரூபா அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளை கைகாட்டி நிறுத்தி உதவி கோரியுள்ளார் ஆனால் நீண்டநேரமாக யாரும் அந்த தம்பதிக்கு யாருமே உதவ முன்வரவில்லை. சுமார் 30 நிமிடம் கழித்து ரூபா தனது மைத்துனிக்கு (வெங்கடரமணனின் தங்கை) செல்போனில் தகவல் கொடுத்துள்ளார். அதன்படி அவர் விரைந்து வந்து, தனது அண்ணனின் உயிரை காப்பாற்ற மூச்சு காற்றை கொடுத்து நெஞ்சை கைகளால் அழுத்தி முதலுதவி சிகிச்சை அளித்திருக்கிறார்.
இருப்பினும் ரூபா உதவி கேட்டு வாகன ஓட்டிகளை நிறுத்துமாறு கூறியபடியே கண்ணீர் மல்க தவித்தார். நீண்ட நேரத்திற்கு பிறகு ஒரு கார் டிரைவர் அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். அவர், வெங்கடரமணன், அவரது மனைவி ரூபா, வெங்கடரமணனின் தங்கை ஆகியோரை காரில் அழைத்துக்கொண்டு ஜெயதேவா இருதய மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு வெங்கடரமணனை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு ரூபா, வெங்கடரமணனின் தங்கை ஆகியோர் கலங்கி அழுதனர். பொதுவாக இதுபோன்ற நிலையில் வாகனத்தை ஒட்டி செல்வது தவறு.. மாரடைப்பு அறிகுறி தெரிந்தால் உடனே ஆம்புலன்ஸில் தான் செல்ல வேண்டும்.
வாகனத்தை ஒட்டி செல்லக்கூடாது. நடிகர்மாரிமுத்து இப்படித்தான் மாரடைப்பு ஏற்பட்ட உடன் தாமதிக்காமல் செல்ல வேண்டும் என்று நினைத்து அவரே வாகனத்தை ஓட்டி சென்று மருத்துவமனையில் அட்மிட் ஆனார். மாரடைப்பு ஏற்பட்டவர்கள் வாகனம் ஓட்டி செல்வது அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும். ஏனெனில் இதய துடிப்பு இன்னும் மோசமாகும். பெங்களூர் சம்பவம் போல் விபத்தில் சிக்கினால் ஒன்றுமே செய்ய முடியாது. எனவே மாரடைப்பு ஏற்பட்டால் முடிந்த வரை ஆம்புலன்ஸில் செல்ல வேண்டும். அப்படி சென்றால் முதலுதவி கிடைக்கும். அத்துடன் விரைவாக செல்ல வாகன ஓட்டிகளும் வழிவிடுவார்கள்.
வேறு வழியில்லை என்றால் வாகனத்தில் செல்லலாம்.. ஆனால் வாகனத்தை மாரடைப்பு ஏற்பட்ட நபரே ஓட்டக்கூடாது. முடிந்தவரை கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்லலாம். இருசக்கர வாகனத்தில்சென்றால் சரிந்து விழுக வாய்ப்பு உள்ளது. அதேநேரம் சாலை குறுகலானது, நெரிசல் அதிகம் என்றால், பின்னால் அமரவைத்து கூட்டி செல்ல வேண்டிய நிலை இருந்தால் செல்லலாம். எனினும் இது மிகவும் ஆபத்தானது. பொதுமக்களே மாரடைப்பு அறிகுறி இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டியது அவசியம் தான். அதற்காக நீங்களே வாகனத்தை ஒட்டி செல்வது நிச்சயம் ஆபத்தானது. பெங்களூர் தம்பதிக்கு ஏற்பட்டநிலைக்கு இதுதான்முதல் காரணம். மனிதநேயம் மரித்துப்போன நிலையில் உங்களை நீங்கள் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
-
வெளியானது IANS கருத்துக்கணிப்பு ரிசல்ட்: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications