பெங்களூரில் மது அருந்தி சுயநினைவை இழந்த பெண் சாப்ட்வேர் என்ஜினியர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்?
பெங்களூர்: பெங்களூரில் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் போதை தலைக்கேறி சுயநினைவை இழந்த பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் தன்னை சிலர் கூட்டு பலாத்காரம் செய்திருப்பதாக புகார் கொடுத்துள்ளார். இதுபற்றி பெங்களூர் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் விசாரணைக்கு பிறகே இதை உறுதி செய்ய முடியும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் நகரம் பெங்களூர். இந்த நகரம் தான், இந்தியாவின் ஐடி நிறுவனங்களின் தலைநகரமாகவும் பார்க்கப்படுகிறது. உலகின் அத்தனை பெரிய ஐடி நிறுவனங்களும் பெங்களூரில் இருக்கின்றன. பெங்களூரில் ஏராளமான தொழில்கள் இருந்தாலும், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தொழில்கள் தான் பிரதானமாக இருக்கின்றன. நாடு முழுவதும் இருந்து வந்து லட்சக்கணக்கான பேர் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள்.

இந்நிலையில் பெங்களூர் கிழக்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் அந்த பகுதியில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். கடந்த டிசம்பர் 12-ந் தேதி இரவு அந்த இளம்பெண் கோரமங்களாவில் உள்ள கேளிக்கை விடுதிக்கு (பப்) சென்றுள்ளார் அங்கு இரவு 7.30 மணியில் இருந்து இரவு 11 மணி வரை அவர் பப்பில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த இளம் பெண்ணுக்கு போதை தலைக்கேறிய நிலையில், சுயநினைவை இழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுயநினைவு திரும்பியதும் நள்ளிரவில் அவர் கண்விழித்து பார்த்துள்ளார். அப்போது அவர், ஆடுகோடி, தேவேகவுடா லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு இருந்திருக்கிறார். இதையடுத்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணை மீட்டார்கள்.
இந்த நிலையில், கோரமங்களா காவல் நிலையத்தில் இளம்பெண் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், டிசம்பர் 12ம் தேதி இரவு 7.30 மணி அளவில் கோரமங்களாவில் உள்ள தனியார் பப் ஒன்றில மது அருந்திக் கொண்டிருந்தேன். மது அருந்தியபோதே நான் சுயநினைவை இழந்து விட்டேன். இரவு 11.30 மணிக்கு மேல் 12.30 மணிவரை எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் என்னை சில நபர்கள் கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்திருக்கலாம் என்றும், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பதற்கான சந்தேகமும் எழுந்திருக்கிறது. அதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும், என்று கூறி இருந்தார்.
இளம்பெண் அளித்த புகாரின் பேரில் கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கடந்த 12-ந் தேதி இரவு பப்பில் இளம்பெண்ணுடன் யாரெல்லாம் சேர்ந்து மது அருந்தினார்கள். அவருடன் இருந்த நபர்கள் பற்றியும், கேளிக்கை விடுதியில் இருந்து எப்படி அந்த பெண் தேவேகவுடா லே-அவுட்டுக்கு சென்றார் என்பது பற்றியும், அவரை மர்மநபர்கள் கூட்டாக பலாத்காரம் செய்தார்களா? என்பது குறித்தும் கோரமங்களா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் சி.கே.பாபா கூறும் போது, பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றும் இளம்பெண் தான் சுயநினைவை இழந்த போது, தன்னை சிலர் கூட்டாக பலாத்காரம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், விசாரித்து வருகிறோம். இந்த சம்பவம் கடந்த 12-ந் தேதி இரவு 11.30 மணியில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்குள் நடந்திருக்கலாம் என அந்த பெண் கூறியுள்ளார்-
ஆனால் சம்பவம் நடந்ததாக இளம்பெண் கூறிய நேரத்திற்கும் போலீசார் நடத்திய விசாரணைக்கும், பொருத்தமானதாக இல்லை. நேரம் வித்தியாசமாக உள்ளது. என்றாலும், இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். விசாரித்த பிறகே அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications