குலுங்கிய பல்லாரி.. ராகுல் யாத்திரையில் கடல் போல கூட்டம்! திடீர்ன்னு பார்த்தா "ஆடு".. அங்கே எப்படி?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை 1000 கிமீ தூரத்தை கடந்து உள்ளது. இந்த சாதனையை முன்னிட்டு நேற்று பல்லாரியில் மிகப்பெரிய கூட்டத்தை ராகுல் காந்தி நடத்தினார்.

காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை நாளுக்கு நாள் வரவேற்பை பெற்று வருகிறது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை யாத்திரை நடைபெற்று வருகிறது.

A goat visit Rahul Gandhi Ballaris meeting during the Bharat Jodo Yatra! What happened?

தினமும் இவரின் யாத்திரையில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் கலந்து கொள்ள தொடங்கி உள்ளனர். 3750 கிலோமீட்டருக்கு இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. இவ்வளவு தூரத்தையும் ராகுல் காந்தி நடந்தே செல்வார். 150 நாட்கள் காங்கிரஸ் சார்பாக இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது

அதோடு இவர் ஊர் ஊராக சென்று யாத்திரை செய்வதால் மக்களை அதிக அளவில் பார்க்கிறார். இதனால் யாத்திரையும் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் பலன் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினமும் 20-30 கிமீ தூரத்தை ராகுல் காந்தி நடந்தே கடக்கிறார். தற்போது இந்த யாத்திரைக்கு மக்கள் தரும் ஆதரவும் அதிகரித்து உள்ளது. கட்சி சாராத பொதுமக்கள் பலர் இந்த யாத்திரையில் கலந்து கொண்டு உள்ளனர்.

A goat visit Rahul Gandhi Ballaris meeting during the Bharat Jodo Yatra! What happened?

முக்கியமாக கர்நாடகாவில் இந்த யாத்திரையில் தினம் தினம் ஆயிரக்கணக்கில் மக்கள் சேர்ந்து வருகின்றனர். இந்திய வரலாற்றில் இதுவரை நடத்தப்படாத மிகப்பெரிய யாத்திரையாக இது பார்க்கப்படுகிறது. தற்போது ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை 1000 கிமீ தூரத்தை எட்டி உள்ளது.

நேற்று முதல்நாள் இரவோடு இந்த யாத்திரை 1000 கிமீ தூரத்தை எட்டியது. இதையடுத்து நேற்று கர்நாடகா மாநிலம் பல்லாரியில் ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தை நடத்தினார். 1000 கிமீ நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக அவர் பெல்லாரியில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை நடத்தினார்.இந்த பொதுக்கூட்டத்தில் எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் கூடியது. 80 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

A goat visit Rahul Gandhi Ballaris meeting during the Bharat Jodo Yatra! What happened?

அதே சமயம் இந்த பொதுக்கூட்டம் தொடர்பான பொய்யான சில புகைப்படங்களும் கூட இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில்தான் ராகுல் காந்தி நேற்று பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டு இருக்கும் போதே கூட்டத்தில் ஆடு ஒன்று புகுந்தது. முன் வரிசையில் மேடைக்கு - மக்களுக்கும் இடையில் ஆடு புகுந்தது.

முன் வரிசையில் நின்ற ஆடு மெதுவாக இங்கும் அங்கு "மே மே" என்று கத்தியபடி சென்றது. இதனால் ராகுல் காந்தி சட்டென பேச்சை நிறுத்தினார். அதன்பின் பாருங்கள் நம்ம கூட்டத்திற்கு ஒரு ஆடு வந்துள்ளது என்றார். இதையடுத்து அங்கு இருந்த அதிகாரி ஒருவரை ஆட்டத்தை தூக்கிக்கொண்டு சென்றார்.

அவர் ஆட்டை தூக்கிக்கொண்டு சென்றது பெரிய திரையில் காண்பிக்கப்பட்டது. இதனால் பொதுக்கூட்டத்தில் சில நிமிடம் போகஸ் முழுக்க அந்த ஆட்டின் பக்கம் திரும்பியது. அங்கு பல ஆயிரம் மக்கள் திரண்டு இருந்தனர். மிகப்பெரிய நுழைவு வாயிலும் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதை எல்லாம் மீறி அந்த ஆடு எப்படி வந்தது என்று தெரியவில்லை.

ராகுல் காந்தியின் பயணம் இன்னும் சில நாட்கள் கர்நாடகாவில் நடக்கும். இந்த பயணம் காரணமாக அவர் மற்றும் அவருடன் செல்லும் நிர்வாகிகள் கடுமையாக கஷ்டப்பட்டு வருகின்றன. அந்த கஷ்டத்தை மீறிதான் இவர்கள் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். தினமும் 20-30 கிமீ தூரம் செல்வதால் இவர்கள் கடுமையாக இன்னல்களை சந்திக்கிறார்கள்.

வேறு வேறு வானிலை, காலநிலை, தண்ணீர், உணவு என்று கடுமையாக கஷ்டப்படுகிறார்கள். மழை நீரில் நடப்பது, வெயிலில் நடப்பது போன்ற கஷ்டங்களையும் இவர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+