நாயால் இறந்த மகன்.. நாய் உருவத்திலேயே வீட்டிற்கு வந்ததால் ஷாக்? மொத்த ஊரே அலறியதால் அதிர்ச்சி
பெங்களூர்: கர்நாடகாவில் விபத்தில் பலியான நபர் நாய் உருவத்தில் வீட்டிற்கு வந்ததாக ஊர் மக்கள் நம்பும் நிகழ்வு அரங்கேறி உள்ளது.
கர்நாடக மாநிலம் காசினகெரே பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் 23 வயது நிரம்பியவர். அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

இவர் தினமும் பைக்கில் பணிக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் இவர் வீட்டுக்கு திரும்பிய போது பைக் விபத்து ஏற்பட்டு உள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்தவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவமனை : மருத்துவமனையில் இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கே இவர் உயிருக்கு போராடி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரிடம் போலீசார் விபத்து குறித்து கேட்டுள்ளனர். போலீசாரிடம் இவர் அளித்த வாக்குமூலத்தில்... நாய் குறுக்கே வந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
நாய் ஒன்று சாலையில் திடீரென வந்தது. அப்போது நாய் மீது மோத கூடாது என்பதால் வாகனத்தை உடனே திருப்பினேன் . அப்போது நிலைதடுமாறி சாலை தடுப்பில் மோதினேன். இதில் தலையில் காயம் பட்டது என்று கூறியுள்ளார்.
தீவிர சிகிச்சை பலனளிக்காமல் இவர் மரணம் அடைந்தார். உடல் உறுப்புகள் சேதம் , மூளையில் காயம், வீக்கம், ரத்த இழப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இவரின் மரணத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
நாய் வந்தது: இந்த சம்பவம் 2 வாரங்களுக்கு முன் நடந்தது. விக்னேஷ் இறந்து ஒரு வாரம் கழித்து அவரின் வீட்டிற்கு நாய் ஒன்று வந்துள்ளது. ஊரில் அதுவரை இல்லாத நாய் திடீரென அங்கே வந்துள்ளது. விக்னேஷ் பெற்றோர் நாயை விரட்ட முயன்றுள்ளனர். எவ்வளவு அடி வாங்கியும் அந்த நாய் செல்லவில்லை.
எங்கும் செல்லாமல் அந்த நாய் அங்கேயே இருந்துள்ளது. முதலில் இதை விரட்ட முயன்றவர்கள் வேறு வழியில்லாமல் விட்டுள்ளனர் . அதன்பின்தான் அந்த நாய் விக்னேஷ் புகைப்படத்தை பார்த்து வீட்டிற்குள் கண்கள் கலங்கி உள்ளது . அந்த நாயின் முகத்தை உற்றுப்பார்த்து விக்னேஷ் குடும்பத்தினர் இதன் முகம் விக்னேஷ் முகம் போலவே இருப்பதாக கூறியுள்ளனர்.
அப்படியே விக்னேஷ் முகம் அந்த நாயிடம் முகத்தோடு ஒத்துபோய் உள்ளது. இதை பார்த்து குடும்பமே கதறி அழுதுள்ளார். அதோடு இல்லாமல்.. நாயை வீட்டிலேயே வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த நாய் வேறு யாரும் இல்லை. இதுதான் விக்னேஷ். நாயாக மறுபிறவி எடுத்து வந்துள்ளான் என்று கூறியுள்ளனர். விக்னேஷ் விருப்பப்பட்டு சாப்பிடும் உணவுகளையே இந்த நாயும் ஆசைப்பட்டே சாப்பிடுவதாக அந்த குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தினர் தகவல்: அதோடு இல்லாமல் அந்த மொத்த கிராமமும் இந்த சம்பவத்தால் அலறி உள்ளது. அந்த நாயின் முகத்தை உற்றுப்பார்த்து விக்னேஷ் ஊரை சேர்ந்தவர்கள் இதன் முகம் விக்னேஷ் முகம் போலவே இருப்பதாக கூறியுள்ளனர். அவரின் முகத்தில் இருக்கும் தழும்பு கூட நாயின் முகத்தில் இருப்பதாக கூறியுள்ளனர்.
இன்னும் சிலரோ விக்னேஷ் சாக காரணமாக இருந்த நாயாக கூட இது இருக்கலாம், குற்ற உணர்ச்சி காரணமாக இங்கே வந்து இருக்கலாம். மற்றபடி இது மறுபிறவி ஆக இருக்க வாய்ப்பே இல்லை. அந்த நாய்தான் குறுக்கே வந்திருக்கும் என்றும் கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications