பிகினி உடை.. ஜாலியாக உல்லாசம்.. அடுத்து ட்விஸ்ட். பெங்களூரு மாடல் அழகி குறித்து திடுக் தகவல்கள்
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஹனிடிராப் முறையில் மிரட்டி தொழில் அதிபர்களிடம் பணம் பறித்த மாடல் அழகி கைது செய்யப்பட்டுள்ளார். பிகினி உடையில் வந்து உல்லாசத்துக்கு அழைத்து வீடியோ எடுத்து மிரட்டிய மாடல் அழகியின் கும்பல் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு இளைஞர் ஒருவர் புட்டேனஹள்ளி போலீஸ் ஸ்டேசனில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் ஹனிடிராப் முறையில் தன்னை மிரட்டி ஒரு இளம்பெண் உள்பட 4 பேர் சேர்ந்து பல லட்சம் ரூபாய் பறித்து விட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து, பெங்களூரு புட்டேனஹள்ளி போலீசார் அந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடினார்கள். இந்நிலையில் இளைஞரை மிரட்டி ஹனிடிராப் முறையில் பணம் பறிக்க மூளையாக செயல்பட்டது மும்பை மாடல் அழகி ரேகா என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கும்பலை சேர்ந்த சரண பிரகாஷ், அப்துல் காதர், யாசின் ஆகிய 3 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர்.
சிக்கிய மாடல் அழகி: அதன்பின்னரே மும்பையை சேர்ந்த மாடல் அழகியான நேகாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி கைது செய்தனர். மாடல் அழகி நேகா, ஹனிடிராப் முறையில் தொழில்அதிபர்கள், வாலிபர்களை மிரட்டி பணம் பறித்து வந்தது உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததும், அவருக்கு பணம் பறிக்க சரண பிரகாஷ், அப்துல் காதர், யாசின் ஆகியோர் உதவியதும் தெரியவந்தது. இது தொடர்பான வெளியான திடுக்கிடும் தகல்களை போலீசார் வெளியிட்டனர்.
சமூக வலைதளம் மூலம் குறி: போலீசார் இதுபற்றி கூறும் போது, நேகா சமூக வலைதளங்களில் வசதி படைத்தவர்கள், தொழில்அதிபர்களை கண்டுபிடிப்பார். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கண்டுபிடித்து, பின்னர் அவர்களில் சபல எண்ணம் உள்ளவர்களை கண்டுபிடித்து டெலிகிராமுக்கு நேக்காக நேகா தொடர்பு கொள்வாராம். பின்னர் அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி தன்னுடன் உல்லாசம் அனுபவிக்கலாம் என்று அழைப்பாராம். அதற்கு பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு வருமாறு நேகா வரவழைப்பாராம்.
பிகினி உடை: அப்படி தன் வீட்டிற்கு வரும் நபர்களை வீட்டு வாசலில் போய் நேகா கிளுகிளுப்பாக வரவேற்பாராம் . பின்னர் வீட்டிற்குள் வரவேற்று உள்ளே அழைத்து சென்றுவிடுவாராம். முன்னதாகவே வீடு முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை அவர் பொருத்தி வைத்திருப்பாராம். வீட்டுக்கு வருபவர்களை பிகினி உடையில் கட்டி அணைத்து நேகா அழைத்து செல்வது கேமராவில் பதிவானதும், வீட்டுக்குள் அமர்ந்து அவர்களுடன் கிளுகிளுப்பாக பேசுவார்களாம். அதனை சரண பிரகாஷ், அப்துல் காதர், யாசின் ஆகிய 3 பேரும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பார்கள்.

வீடியோக்களை வைத்து மிரட்டல்: அந்த வீடியோக்களை வெளியிடுவதாக கூறி மிரட்டி பின்னர் பணம் பறிப்பார்களாம். நேகா உள்பட 4 பேரும் இந்த ஹனிடிராப் தொழிலை வழக்கமாக வைத்திருந்துள்ளார்கள். போலீசார் விசாரித்த வரையில், இதுவரை தொழிலதிபர்கள்,இளைஞர்கள் என 12 பேரை ஹனிடிராப் முறையில் சிக்க வைத்து ரூ.30 லட்சம் வரை நேகா பறித்திருக்கிறாராம்.
விசாரணை: மாடல் அழகி நேகாவின் செல்போனில் இருந்து பிகினி உடையில் இளைஞர்களுடன்இருக்கும் புகைப்படங்களை வைத்து ஹனிடிராப் முறையில் பணம் பறித்தது உறுதியானது என போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான மாடல் அழகி உள்பட 4 பேர் மீதும் புட்டேனஹள்ளி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.இன்னும் யாரெல்லாம் ஏமாந்துள்ளார்கள் என்பது முழு விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.












Click it and Unblock the Notifications