மாசம் ரூ.2 கோடி! மொத்தம் ரூ.500 கோடி! விவாகரத்து தர பெண் கேட்ட ஜீவனாம்சம்! அதிர வைத்த இன்ஸ்டா ரீல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கணவருக்கு விவாகரத்து தர பெண் ஒருவர் கேட்ட ஜீவனாம்சம் தொகை மக்களிடையே கவனத்தை ஈர்த்து உள்ளது.

இந்தியாவில் விவாகரத்து பெறுவதற்கு பல்வேறு வகையான அலிமோனி விதிமுறைகள் உள்ளன. அதாவது ஜீவனாம்ச விதிமுறைகள் உள்ளன. இந்தியாவில், ஜீவனாம்சம் பெறும் விதிகள் விவாகரத்தின் சூழ்நிலைகள் மற்றும் பொருந்தும் சட்டத்தைப் பொறுத்து மாறுபடும்:

bangalore court

மாதாந்திர ஜீவனாம்சம்: கணவரின் நிகர மாதச் சம்பளத்தில் 25% மனைவிக்கு ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

ஒரு முறை ஜீவனாம்சம்: மாதம் மாதம் கொடுப்பதற்கு பதில்.. ஒரே ஒரு முறை மட்டும் செட்டில்மெண்ட் செய்யலாம். ஒரு முறை செட்டில்மென்ட் செய்வதற்கு எந்த அளவுகோலும் இல்லை, ஆனால் இது பொதுவாக கணவரின் நிகர மதிப்பில் 1/5 முதல் 1/3 பங்கு வரை இருக்கும்.

ஜீவனாம்சம் எப்போது தர வேண்டும்: விவாகரத்தின் போது மனைவி கோரிக்கைக்கும் வைக்கும் பட்சத்தில் ஜீவனாம்சம் தந்தே ஆக வேண்டும். நீதிமன்றம் ஒவ்வொரு வழக்கின் போக்கை பொறுத்து ஜீவனாம்சம் தொகையை பற்றிய முடிவை எடுக்கும். இந்து திருமண சட்டத்தின் கீழ் பராமரிப்பு கைவிடுதல், கொடுமைப்படுத்துதல், மதமாற்றம் செய்தல் அல்லது வேறொரு மனைவியைக் கொண்டிருப்பது போன்ற காரணங்களுக்காக 1956 ஆம் ஆண்டின் இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் பிரிவு 18ன் கீழ் மனைவி ஜீவனாம்சம் கோரலாம்.

முஸ்லீம் சட்டத்தின் கீழ் ஜீவனாம்சம்: முஸ்லீம் தனிநபர் சட்டம் (ஷரியத்) விண்ணப்பச் சட்டம் 1937 முஸ்லீம்களுக்கு பொருந்தும். இதன்படி திருமணத்தின் போதும் அதற்குப் பின்னரும் கணவர் தனது மனைவிக்கு பராமரிப்பு வழங்க வேண்டும். மனைவியின் வாழ்க்கைத் தரம், வாழ்க்கைச் செலவு மற்றும் கட்சிகளின் சம்பாதிக்கும் திறன் ஆகியவற்றை நீதிமன்றம் ஜீவனாம்சம் வழங்கும் வழக்கில் காரணிகளாக கருதுகிறது.

கர்நாடகா: இப்படிப்பட்ட நிலையில்தான் கர்நாடகாவில் கணவருக்கு விவாகரத்து தர பெண் ஒருவர் கேட்ட ஜீவனாம்சம் தொகை மக்களிடையே கவனத்தை ஈர்த்து உள்ளது. பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.

அங்கே வழக்கு ஒன்றில்.. பெண் ஒருவர் ரூ. 2 கோடி மாதம் மாதம் கேட்டு உள்ளார். அதாவது ஒவ்வொரு மாதமும் 2 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு டைம் செட்டில்மென்ட் ரூ. 500 கோடி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம்.

இதில் கணவர் தரப்பு வழக்கறிஞர் வாதம் வைக்கயில்.. பெண் தரப்பு அரசியல் பின்புலம் கொண்டவர்கள். அதானால் கணவர் தரப்பை மிரட்டுகிறார்கள். அரசியல் பவரை பயன்படுத்தி.. அதிக அளவு இழப்பீடு அல்லது ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கிறார்கள் என்று வாதம் வைத்துள்ளார்.

இதை கேட்ட நீதிபதி ஒருவர்.. ஒரு மாதத்திற்கு 2 கோடி ரூபாய்க்கு என்ன செலவு செய்வார்.. இது வினோதமாக இருக்கிறதே.. இதை எல்லாம் வழங்க முடியாது என்று கூறி உள்ளார். அந்த பெண்ணுக்கு 2 கோடி ரூபாய் ஜீவனாம்சம் தொகை எல்லாம் வழங்க முடியாது என்று நீதிபதி மறுத்துள்ள நிலையில் தொகையை குறைத்து மனுவில் மாற்றங்களை செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+