கர்நாடகாவில் அழகு நிலைய பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை.. காங்கிரஸ் நிர்வாகிக்கு சரமாரி அடி உதை
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் தனது அழகு நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தற்காக காங்கிரஸ் நிர்வாகி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சமீப காலமாகவே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாட்டில் அதிகரிக்க தொடங்கி விட்டன.
பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் அரங்கேறாமல் இல்லை.

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை
இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள ஒரு அழகு நிலையம் ஒன்றில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கு அந்த அழகு நிலையத்தின் உரிமையாளரும், காங்கிரஸ் நிர்வாகியுமான மனோஜ் கர்ஜாகி பாலியல்தொல்லை அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

காங்கிரஸ் நிர்வாகி
அந்த அழகு நிலையத்தை நடத்தி வருபவர் மனோஜ் கர்ஜாகி. காங்கிரஸ் நிர்வாகியான இவர் அமைச்சர் ஒருவரின் முன்னாள் உதவியாளராக இருந்து வந்தார். இதேபோல் காங்கிரஸ் தலைவர் சித்தராமையா முதல்வராக இருந்த போது, அவரது ஆட்சியில் வடமேற்கு கர்நாடக மாநில போக்குவரத்து கழக முன்னாள் இயக்குநராகவும் மனோஜ் கர்ஜாகி இருந்து வந்தார். தற்போது இவர அழகு நிலையம் ஒன்று நடத்தி வருகிறார். இதில் பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

கட்டிப்பிடித்து முத்தமிட..
இந்த நிலையில் சம்பவத்தன்று தனது அழகு நிலையத்திற்கு வந்த மனோஜ் கர்ஜாகி, அழகு நிலையத்தில் தனியாக இருந்த ஒரு பெண் ஊழியரை திடீரென கட்டிப்பிடித்து முத்தமிட முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அங்கிருந்து ஓடி சென்றார். பின்னர் தனது காதலனுக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் தனது நண்பர்கள் சிலருடன் அழகு நிலையம் வந்து மனோஜ் கர்ஜாகியை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கினர்.

சிறையில் அடைப்பு
பின்னர் நடந்த சம்பவம் குறித்து அங்குள்ள போலீஸ் நிலையத்தில் பெண் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் காங்கிரஸ் நிர்வாகியான மனோஜ் கர்ஜாகியை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டு அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அழகு நிலையத்தில் பணிபுரிந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அம்மாநிலத்தின் முன்னாள் முதலவர் சித்தாராமையாவுடன் மனோஜ் கர்ஜாகி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications