கர்நாடகாவை கதிகலங்க வைத்த ரசிகர் கொலை.. ஜாமீனில் வெளிவந்த நடிகர் தர்ஷன்! மருத்துமனையில் அனுமதி!
பெங்களூர்: நடிகையும் தனது தோழியுமான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதால் ஆத்திரமடைந்து தனது சொந்த ரசிகரையே கொடூரமாக கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு ஆறு வாரம் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருக்கிறார் தர்ஷன்.
கன்னட திரை ரசிகர்களால் சேலஞ்சிங் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகர் தர்ஷன். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில் கன்னட திரையுலகில் நடிகையாக வலம் வரும் பவித்ரா கவுடாவுடன் முறை தவறிய பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் தொடர்ந்து பவித்ரா கவுடாவுக்கு மிரட்டல்கள் வந்தன. குறிப்பாக ரேணுகா சாமி என்பவர் பவித்ரா கவுடாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஆபாசமாக மெசேஜ் அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது.
தர்ஷனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருக்கும் நிலையில் குழந்தைகளை விட்டுவிட்டு பவித்ரா கவுடாவுடன் தர்ஷன் இருப்பதை விரும்பாத அவரது தீவிர ரசிகரான ரேணுகா சாமி, தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்திருக்கிறார். மேலும் ஆபாச புகைப்படங்களை, செய்திகளையும் அனுப்பி வந்துள்ளார். ரேணுகாசாமி, நடிகை பவித்ராவுக்கு இன்ஸ்டா தளத்தில் பவித்ர கவுடா என்ற பெயரில் மெசேஜ் செய்ததும், அதில் நடிகையின் தீவிர ரசிகர் என்றும், உடலுறவு கொள்ள வருமாறு அழைப்பு விடுத்ததும் தொடர்ந்து தனது ஆபாச புகைப்படத்தை அனுப்பியதே கொலைக்கான மூல காரணம் எனவும் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தொடர்ந்து தனது மேனேஜர் மூலம் ரேணுகா சாமியுடன் பெண் போல பேசி அவரது விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பவித்ரா கவுடா இது குறித்து நடிகர் தர்ஷனிடம் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து தனது மேனேஜர் மூலம் ரேணுகா சாமியுடன் பெண் போல பேசி அவரது விவரங்களைக் கண்டுபிடித்துள்ளார் தர்ஷன். இதை அடுத்து தனது ரசிகர் மன்ற தலைவரான ராகவேந்திரா மூலம் ரேணுகா சாமியை, சித்ரதுர்கா பகுதியில் இருந்து பெங்களூருக்கு வரவழைத்து இருக்கிறார் தர்ஷன்.
தொடர்ந்து அவரை தனியாக அடைத்து வைத்து சரமாரியாக தாக்கி இரும்பு கம்பியால் அடித்து உதைத்துள்ளனர். பவித்ரா கவுடாவும் அவரை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரேணுகா சாமி உயிரிழந்த நிலையில் அவரது உடல் மறைக்கப்பட்டது. தொடர்ந்து ரேணுகா சாமியை காணவில்லை என புகாரை தொடர்ந்து அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் ரேணுகா சுவாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என பெங்களூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த 23ஆம் தேதி இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், தர்ஷனுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு ஆட்சேபனை தெரிவிக்க வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தர்ஷன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த 30ஆம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனக்கு கடுமையான முதுகு வலி இருப்பதாகவும் அதனால் சிகிச்சை பெறுவதற்காக இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என தர்ஷன் தரப்பில் முறையிடப்பட்டது. இதனையடுத்து தர்ஷனுக்கு சிகிச்சைக்காக 6 வாரம் இடைக்கால ஜாமின் வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
தர்ஷனுக்கு முதுகு வலி அதிகரித்ததாகவும் இடது கால் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து ஐந்து மாதங்கள் கழித்து வீடு திரும்பிய தர்ஷன் முதுகு வலி மற்றும் கால் வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக பெங்களூர் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை அடுத்து பெங்களூரு குளோபல் மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் நடிகர் தர்ஷனின் வீட்டிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் தர்ஷனை பிறர் சந்திக்கவும் மற்றவர்களுடன் பேசவும் போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாக கூறப்படுகிறது. சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு இருப்பதாக காவல்துறை ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications