ராஜ்குமார் குடும்பத்தை விடாத சோதனை.. சிகிச்சைக்காக அமெரிக்கா போகும் நடிகர் சிவராஜ்குமார்
பெங்களூர்: ‛கன்னட சூப்பர் ஸ்டார்' என அழைக்கப்படும் சிவராஜ்குமார் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். தனக்கு உள்ள பாதிப்பு பற்றி அறிந்தபோது பயந்துபோனதாகவும், தற்போது அந்த பயம் இல்லை. அமெரிக்காவில் சிகிச்சை பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்து இருப்பது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.
மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகன் சிவராஜ் குமார். இவர் கன்னட சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருகிறார். கர்நாடகாவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சிவராஜ்குமார் கன்னடம் மட்டுமின்றி பிற மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சிவராஜ்குமார் ‛பைரதி ரணகல்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டில் வெளியான ‛முப்தி' திரைப்படத்தின் தொடர்ச்சியாக ‛பைரதி ரணகல்' திரைப்படம் அமைந்துள்ளது. இந்த திரைப்படம் நவம்பர் 15ம் தேதி திரைக்கு வர உள்ளது. தற்போது சிவராஜ்குமார் படத்தின் புரோமோஷன் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.
இத்தகைய சூழலில் தான் நடிகர் சிவராஜ்குமார் உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்து கொள்ள உள்ளார். இதனை சிவராஜ் குமாரே உறுதி செய்துள்ளார். அதாவது ‛ரைபதி ரணகல்' படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சிவராஜ் குமார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிவராஜ்குமார், ‛‛நானும் மனிதன் தான். எனக்கும் பிரச்சனைகள் இருக்கிறது. இந்த பிரச்சனைகளுக்காக சிகிச்சை எடுத்து வருகிறோம். 2 செசன்களாக எனக்கான சிகிச்சை நிறைவு பெற உள்ளது. இன்னும் 2 செசன்களுக்கான சிகிச்சை மீதம் உள்ளது. இந்த சிகிச்சையை அமெரிக்காவில் எடுக்க உள்ளேன். சிகிச்சைக்கு பிறகு ஒருமாதத்தில் மீண்டு விடுவேன்.
முதலில் இந்த பிரச்சனை பற்றி கேட்டறிந்தபோது பயந்துவிட்டேன். ஆனால் மக்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை. இந்த பிரச்சனையை என்னால் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் கண்டிப்பாக மீண்டு வருவேன். யாரும் கவலைப்பட வேண்டாம். சமீபத்தில் 2 மாதங்களுக்கு முன்பு நான் செல்பி எடுக்க வந்தவர்களை கொஞ்சம் தள்ளி நிற்கும்படி கூறினேன். பொதுவாக நான் அப்படி சொல்வது இல்லை. இதில் மக்கள் தவறாக நினைத்து விட வேண்டாம். ஏனென்றால் தொற்று பரவி விடக்கூடாது என்பதற்காக தான் கூறினேன். விரைவில் நான் இயல்பு நிலைக்கு வருவேன்'' என்று கூறியுள்ளார்.
இருப்பினும் சிவராஜ் குமார் எந்த வகையான உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அமெரிக்காவில் எந்த வகையான சிகிச்சை அளிக்கப்பட உள்ளது என்பது பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. சிவராஜ்குமார் குடும்பத்தினரும் அவ்வப்போது உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். மருத்துவமனைகளில் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவராஜ்குமாரின் தந்தை ராஜ்குமார் மாரடைப்பு ஏற்பட்டு தான் 2006ல் இறந்தார். அதேபோல் சிவராஜ்குமாரின் தம்பியான புனித் ராஜ்குமார் தனது 46வயதில் கடந்த 2021ம் ஆண்டில் மாரடைப்பால் இறந்தார். இவர்கள் அடிக்கடி மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வந்தாலும் கூட திடீரென்று இறந்து போனது குடும்பத்தினரை அதிர்ச்சியடைய செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications