தங்கத்தை ‘அங்கே’ வைத்து கடத்திய ரன்யா ராவ்..மதிப்பு இத்தனை கோடியா? மிரண்டு போன போலீஸ்..கோர்ட் அதிரடி
பெங்களூர்: தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நடிகை ரன்யா ராவ், தொழிலதிபர் தாருன் ராஜு, ஷாகில் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அவர்களது நீதிமன்ற காவலை ஏப்ரல் 21ஆம் தேதி வரை நீடித்து பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. போலீசார் நடத்திய விசாரணையில் சுமார் 17 கோடி மதிப்புள்ள 14 கிலோ தங்கத்தை ரன்யா ராவ் உடைகளுக்குள் மறைத்து வைத்து கடத்தியதாகவும், அவர்களுக்கு எதிராக பல முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும் போலீஸ் தரப்பு கூறியுள்ளது.
2016 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வாகா திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் ரன்யா ராவ். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அவர் நடித்திருக்கிறார். மேலும் இவர் கர்நாடக காவல்துறை டிஜிபி ராமச்சந்திராவின் வளர்ப்பு மகளும் ஆவார்.

இந்த நிலையில் கடந்த மூன்றாம் தேதி பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். துபாயில் இருந்து 15 கிலோ எடை உள்ள தங்கத்தை கடத்தி வந்ததாக தகவல் வெளியான நிலையில் அவரை சோதனை செய்த அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும் இது தொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் வழக்கு பதிவு செய்த நிலையில் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அதில் சுமார் இரண்டரை கோடி ரூபாய் ரொக்கம். இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. அவருக்கு சர்வதேச தங்க கடத்தல் மற்றும் பெங்களூரின் தங்க வியாபாரிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இந்த வழக்கில் நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர் தருண்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து ரன்யா ராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல நாட்களாக அவர் இதே போல தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மும்பை பெங்களூரு உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது, பெங்களூரு நீதிமன்றம் மூவரையும் ஏப்ரல் 21 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதில், கடந்த 2023ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை 45 முறை தனியாக துபாய் பயணம் செய்திருந்தார் என்பது தெரியவந்துள்ளது. இது, அவர் ஒரு மிகப் பெரிய தங்கக் கடத்தல் நெட் ஒர்க்கில் தொடர்புடையவர் எனவும் போலீசார் கூறியுள்ளனர். Vira Diamonds Trading LLC என்ற துபாயில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தை ரன்யா மற்றும் தொழிலதிபர் தாருண் ராஜு தொடங்கி, அதனை தங்கக் கடத்தலுக்கான ஒரு ஏஜென்சி போல் பயன்படுத்தியுள்ளனர். தருண் ராஜு துபாயிலிருந்து தங்கத்தை வாங்கி, தனது அமெரிக்க பாஸ்போர்ட்டை பயன்படுத்தி இந்தியாவுக்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து பல்வேறு விசாரணைக்கு பிறகு ரன்யா ராவ், தருண் ராஜு, ஷாகில் ஜெயின் ஆகியோருக்கு எதிராக சாட்சியங்கள், வாக்குமூலங்கள், பண பரிவர்த்தனை உள்ளிட்ட சான்றுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், ரன்யாவின் வீட்டில் நடத்திய சோதனையில் சுமார் 2 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் இரண்டரை கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஏற்கனவே இவர்கள் பலமுறை வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டு இருப்பதால் வெளிநாடு தப்பிச்செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி அவர்களுக்கு ஜாமின் வழங்க மறுத்ததோடு, நீதிமன்ற காவலையும் வரும் 21-ம் தேதி வரை நீட்டித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications