ரன்யா ராவ் தொடையில் மின்னிய தங்கம்! இதுக்கு ரூ 75 லட்சம் கமிஷனாம்! நடிகை பகீர் வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: துபாயில் இருந்து பெங்களூருக்கு 14 கிலோ தங்கக் கட்டிகளை கடத்திய வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ், அவரது தொடையில் தங்க பிஸ்கெட்டுகளை ஒட்டி கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் இது போல் தங்க கடத்தல் மூலம் நிறைய பணம் கிடைக்கப் பெற்று இவர் ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

கர்நாடகா மாநிலம் சிக்மக்ளூரைச் சேர்ந்தவர் ரன்யா ராவ் (34). இவர் கன்னடத்தில் இரு படங்களில் நடித்துள்ளார். அது போல் தமிழில் விக்ரமுடன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.

bangalore crime ranya rao

இவர் கர்நாடகா போலீஸ் குடியிருப்பு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக ஏடிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகள் என்கிறார்கள். இவர் கடந்த 3 ஆம் தேதி துபாயில் இருந்து பெங்களூர் வந்த விமானத்தில் 14.8 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்துள்ளார்.

சுங்கத் துறை

இவர் மீது சந்தேகமடைந்த சுங்கத் துறை அதிகாரிகள், இவரை சோதனை செய்த போது தொடையில் தங்க கட்டிகளை ஒட்டிக் கொண்டு கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

வீட்டில் சோதனை

இந்த நிலையில் பெங்களூரில் லாவெல்லி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள இவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் 2.06 கோடி ரூபாய் தங்க நகைகள், ரூ 2.67 கோடி ரொக்கம் உள்ளிட்டவை சிக்கின.

பெங்களூர் விமான நிலையம்

பெங்களூர் விமான நிலையத்தில் இத்தனை அதிக மதிப்பிலான தங்கக் கட்டிகளை கடத்துவது இதுதான் முதல் முறை என வருவாய் புலனாய்வு துறையினர் சொல்கிறார்கள்.

ரன்யா ராவிடம் விசாரணை

ரன்யா ராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பல்வேறு திடுக் தகவல்களை தெரிவித்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரன்யாவுக்கு ஆடம்பரமாக திருமணம் நடந்ததாம். அவருடைய கணவர் கட்டட வடிவமைப்பாளர், பிரபல அரசியல்வாதியின் உறவினராம்.

ரன்யாவுக்கு நேரடி தொடர்பில்லை

திருமணத்திற்கு பிறகு இருவரும் லாவெல்லி சாலையில் உள்ள குடியிருப்பில் தங்கினர். தங்கம் கடத்தலில் ரன்யா ராவுக்கு நேரடி தொடர்பு இல்லையாம். அவர் குருவி போல் செயல்பட்டுள்ளார். அதாவது நடைகளை கடத்தி கொடுத்தால் ரன்யாவுக்கு கமிஷன் கிடைத்ததாம்.

அறை எடுத்து கொடுக்கும் கும்பல்

பெங்களூரில் இருந்து துபாய்க்கு செல்லவும் ஹோட்டலில் தங்கவும் அவருக்கு கடத்தல் கும்பல் அறை முன்பதிவு செய்து கொடுத்துவிடுமாம். துபாயில் இருந்து எப்போது பெங்களூர் செல்ல வேண்டும், தங்கம் எங்கு இருக்கும் உள்ளிட்ட தகவல்களை அந்த கும்பல்தான் சொல்லுமாம்.

தொடையில் ஒட்டும் ரன்யா

துபாய் விமான நிலையத்திற்குள் வந்ததும் சிறிது நேரம் இருக்கையில் அமர்ந்திருப்பாராம். விமானம் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் நேராக கழிப்பறைக்குச் செல்வாராம். அங்கும் தங்கக் கட்டிகள் இருக்குமாம். அவற்றில் பசை போட்டு தொடையில் ஒட்டி, பேன்டேஜ் போட்டு கடத்தி வருவாராம். துபாயில் இருந்து பெங்களூர் வரும் போதெல்லாம் ஒரே மாதிரியான உடையையே அணிந்திருந்தாராம்.

ஏடிஜிபியின் மகள்

பெங்களூர் விமான நிலையத்தில் அவரை சோதனை செய்ய முற்பட்டால் தான் ஏடிஜிபியின் மகள் என கூறிவிடுவாராம். இதனால் அதிகாரிகளும் இவரை சோதனை செய்யாமல் அனுப்பினராம். விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் அவரை சிலர் வாகனத்தில் அழைத்து செல்வார்களாம். தனது குடியிருப்பில் ரன்யாவை விட்டுவிட்டு காத்திருப்பார்களாம்.

ரூ 75 லட்சம்

பிறகு ரன்யா உள்ளே சென்று தங்கக் கட்டிகளை எடுத்து ஒரு பையில் போட்டு அந்த நபர்களிடம் கொடுத்துவிடுவாராம். அது போல் ஒரு கிலோ தங்கம் கடத்தினால் ரன்யாவுக்கு ரூ 5 லட்சம் கமிஷனாக வழங்கப்படுமாம். தற்போது கடத்திய 14.8 கிலோ தங்கத்தை சிக்காமல் கொடுத்திருந்தால், ரன்யாவுக்கு ரூ 75 லட்சம் சொளையாக கிடைத்திருக்குமாம். இவ்வாறு ரன்யா வாக்குமூலம் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+