என்னப்பா, விமானம் ரிவர்ஸ் கியர் போட்டு பறக்குது.. பெங்களூரில் த்ரில்- வீடியோ
Recommended Video

பெங்களூர்: கார், ஆட்டோ, பஸ்.. ஏன் லாரிகள் கூட ரிவர்ஸ் கியர் போட்டு பார்த்திருப்பீங்க. ஆனால் விமானம் ரிவர்ஸ் எடுத்து பார்த்துள்ளீர்களா.. அதுவும் பறக்கும்போது?
பெரும்பாலானோர் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். பெங்களூரில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியை பார்த்தவர்கள் பதில் ஆம் என்பதாக இருக்கும். அட ஆமாங்க.. உண்மையிலேயே பெங்களூர் விமான கண்காட்சியில் நடத்தப்பட்ட சாகசத்தில், விமானம் ஒன்று ரிவர்ஸ் கியர் போட்டு பறந்தது.

பெங்களூரில் 5 நாட்கள் நடைபெறும் விமான கண்காட்சி நேற்று துவங்கியது. பல நாட்டு முன்னணி நிறுவனங்களும் இதில் பங்கேற்றுள்ளன. நேற்றைய துவக்க நாள் விழாவில், கர்நாடக முதல்வர் குமாரசாமி, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அவர்கள் முன்னிலையில்தான், வானத்தில் ரிவர்ஸ் கியர் போட்டு விமானம் சென்றது. இதைப் பார்த்த பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர். தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.
#AeroIndia2019: Ever seen an Aircraft in a reverse gear?
— All India Radio News (@airnewsalerts) February 20, 2019
Watch: #Sukhoi30 @AeroIndiashow pic.twitter.com/shbCWvgJYO
குமாரசாமி, நிர்மலா சீதாராமன் ஆகியோரும் கை தட்டி உற்சாகப்படுத்தினர். அந்த விமானம் இந்திய விமானப்படையில் உள்ள சுகோய் 30 வகை விமானம் என்பது மேலும், சிறப்பு. (இந்த ட்விட்டர் வீடியோவில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் அந்த காட்சி உள்ளது)
இதேபோல நேற்று ரபேல் போர் விமானமும் தனது வீராவேசத்தை காட்டியது. சீறிப் பாய்ந்து சென்றது அந்த விமானம். இதுவும் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications