ஏரோ இந்தியா 2023: பாதுகாப்பு முதலீடுகளுக்கு ஊக்கம்- உ.பி., தமிழ்நாடு அரசுக்கு ராஜ்நாத்சிங் பாராட்டு!
பெங்களூர் ஏரோ இந்தியா கண்காட்சி ஒரு பகுதியாக ராணுவ உபகர உற்பத்தி நிறுவன சிஇஓக்களை ராஜ்நாத்சிங் சந்தித்தார்.
பெங்களூர்: பாதுகாப்புத் துறை சார்ந்த முதலீடுகளுக்கு ஊக்கம் தரக் கூடிய உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்று வரும் ஏரோ இந்தியா விமானக் கண்காட்சியின் ஒரு பகுதியாக சர்வதேச நாடுகளைச்சேர்ந்த ராணுவ உபகரண உற்பத்தி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கலந்துரையாடலின் போது, சர்வதேச பாதுகாப்பு சார்ந்த தொழில்களுக்கான மிகப்பெரிய உள்நாட்டு பாதுகாப்புப் பொருட்களுக்கான சந்தையாக இந்தியா திகழ்வதாக அவர் கூறினார். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான ஆரோக்கியமான சூழலை இந்தியா உருவாக்கி இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில், உலக நாடுகளைச்சேர்ந்த பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் பங்கெடுத்துக் கொள்ளலாம் எனவும் அழைப்பு விடுத்தார்.

பாதுகாப்பு கருவிகள் உற்பத்தியைப் பொறுத்த வரை நாடு தன்னிறைவு அடைவதும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் இரட்டை இலக்காக இருப்பதாகவும் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். அவ்வாறு, இந்தியாவில் பாதுகாப்பு உபகரண உற்பத்தித் துறையில் முதலீடு செய்ய முன்வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தமிழ்நாடும், உத்தரப்பிரதேசமும் ஊக்கத்தொகை வழங்குவதையும், பாதுகாப்பு உற்பத்தித் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கும் கொள்கைகளை மத்திய அரசு செயல்படுத்தி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதே நேரத்தில், இந்தியாவில் தொழில் தொடங்கும் வெளிநாட்டு நிறுவனங்களைக் காக்கும் முறையில் சட்டப் பாதுகாப்பு இருப்பதையும் அமைச்சர் ராஜ்நாத்சிங் நினைவு கூர்ந்தார்.
இந்திய பாதுகாப்பு உற்பத்தியில் சர்வதேச முதலீடு குறித்த தங்கள் கருத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களின் செயல் அதிகாரிகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்ட அமைச்சர் ராஜ்நாத் சிங், தனியார் தொழில் நிறுவனங்களுக்குத் தடையாக உள்ள அம்சங்களை நீக்குவதற்கு மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் உறுதியளித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச்சேர்ந்த தனியார் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், மத்திய பாதுகாப்புத் துறை செயலாளர் கிரிதர் அரமனே, கூடுதல் செயலாளர் பங்கஜ் அகர்வால் மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் ஏரோ இந்தியா 2023 கண்காட்சிக்கு இடையே பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஏற்பாடு செய்திருந்தார். பாதுகாப்புத்துறையில் நடவடிக்கைகளை மேம்படுத்துவதன் மூலம் பகிரப்பட்ட முன்னேற்றம் என்ற விரிவான கருப்பொருளுடன் இந்த மாநாடு நடைபெற்றது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications