அப்போது ஹிஜாப் விவகாரம்.. இப்போது பைபிள் சர்ச்சை.. கர்நாடகாவில் அரங்கேறும் அடுத்தடுத்து சர்ச்சைகள்
பெங்களூர்: கர்நாடகாவில் அடுத்தடுத்து சர்ச்சை சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், ஹிஜாப் விவகாரத்திற்கு அடுத்து இப்போது பைபிள் தொடர்பான சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய ஹிஜாப் விவகாரம் உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னர் தான் சற்று ஓய்ந்தது.
தொடர்ந்து இந்து கோயில்கள் முன்பு இருந்த முஸ்லீம் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும், முஸ்லீம் இறைச்சி வியாபாரிகள் ஹலால் செய்யப்படாத இறைச்சியை விற்க வேண்டும் என்ற சர்ச்சையும் எழுந்தது.

கர்நாடகா
இந்நிலையில், இப்போது அங்கு அடுத்து சர்ச்சையைக் கிளம்பி உள்ளது. கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியின் செயல் சலசலப்பை உருவாக்கி உள்ளது. அதாவது தங்கள் பள்ளிகளில் புனித புத்தகமான பைபிளை எடுத்துச் செல்வதை எதிர்க்க மாட்டோம் என்று பெற்றோரிடம் உறுதிமொழி வாங்கி உள்ளது. இந்த நடவடிக்கைக்கு சில வலதுசாரி குழுக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது கர்நாடக கல்விச் சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாக வலதுசாரி அமைப்புகள் சாடியுள்ளன.

பைபிள்
இந்த விவகாரம் குறித்து இந்து ஜனஜக்ருதி சமிதி மாநில செய்தித் தொடர்பாளர் மோகன் கவுடா கூறுகையில், "இந்த பள்ளி கிறிஸ்தவர் அல்லாத மாணவர்களை பைபிளை படிக்க வற்புறுத்துகிறது" என்று குற்றஞ்சாட்டி உள்ளார். அதாவது கிறிஸ்தவர் அல்லாத மாணவர்களையும் பள்ளி நிர்வாகம் பைபிளை படிக்க வற்புறுத்துவதாக வலதுசாரிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இருப்பினும், பள்ளி நிர்வாகம் தாங்கள் பைபிள் அடிப்படையிலான கல்வியை வழங்குவதாக விளக்கம் அளித்துள்ளது.

பள்ளி விளக்கம்
அந்த பள்ளியின் +1 மாணவர் சேர்க்கை படிவத்தில், "உங்கள் குழந்தை தார்மீக மற்றும் ஆன்மீக நலனுக்காக மார்னிங் அசெம்பிளி ஸ்கிரிப்ச்சர் கிளாஸ் மற்றும் கிளப்கள் உட்பட அனைத்து வகுப்புகளிலும் கலந்து கொள்வார்கள் என்றும் அதை நாங்கள் எதிர்க்க மாட்டோம் என்றும் உறுதி அளிக்கிறோம். அவர் கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தங்கியிருந்த காலத்தில் பைபிள் வைத்திருப்பதையும் எதிர்க்க மாட்டோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடகா
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் தான், பள்ளிகளில் பகவத்கீதையை அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்த பேச்சு எழுந்து இருந்தது. பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக குஜராத் மாநிலத்தில் 6-12 வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தது.

ஹிஜாப் விவகாரம்
கர்நாடகாவில் கடந்த ஜனவரி மாதம் முதலே ஹிஜாப் சர்ச்சை இருந்து வந்தது. முதலில் அங்குள்ள சில பியு கல்லூரிகளில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது. அப்படியே அந்தத் தடை வேறு சில அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது. கல்லூரி நிர்வாகங்களின் இந்த உத்தரவை எதிர்த்து முஸ்லீம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து முஸ்லீம் மாணவிகள் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அமர்வு, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று தெரிவித்தனர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications