அதிர்ந்துபோன பெங்களூர் ஒசூர் சாலை.. கபே-யில் சிலிண்டர் வெடித்து தீ! 3வது மாடியிலிருந்து குதித்த நபர்
பெங்களூர்: பெங்களூர் கோரமங்களா அருகே ஓசூர் ரோட்டில் 4வது மாடியில் செயல்பட்டு வந்த ‛முட்பைப்' கபேவின் கட்டத்தில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஊழியர் ஒருவர் மாடியில் இருந்து கீழே குதித்த உயிர் தப்பிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூர் கோரமங்களா அருகே ஓசூர் ரோட்டில் போரம் மால் அமைந்துள்ளது. இந்த மாலின் எதிரே அடுக்குமாடி கட்டடம் உள்ளது. இந்த கட்டடம் 4 மாடிகளை கொண்டுள்ளது.

இந்த கட்டடத்தில் ஜிம், நெக்சா ஷோரூம், ‛மட்பைப்' எனும் கபே செயல்பட்டு வருகிறது. இதில் ‛மட்பைப்' கபே கட்டடத்தின் 4வது மாடியில் செயல்பட்டு வருகிறது.
இந்த கபே மதியம் முதல் இரவு வரை செயல்பட்டு வருகிறது. இன்று மதியம் கபேவை திறந்து ஊழியர் பணி செய்ய தொடங்கினார். அப்போது சமையலறையில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. அதன்பிறகு திடீரென்று பயங்கர சத்தத்துடன் கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இதனால் தீயின் தாக்கம் அதிகரித்தது.
இந்த தீ சமையலறை மட்டுமின்றி கபே முழுவதும் பரவியது. அதோடு அந்த கட்டடத்தில் இருக்கும் ஜிம்முக்கும் தீ பிரவியது. இதனால் அங்கிருந்தவர்கள் அனைவரும் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். மேலும் அந்த கட்டடத்தில் இருந்து கரும்புகை குபுகுபுவென வெளியேறியது.
#BREAKING_NEWS: Fire erupts in a #Bengaluru pub on the 4th floor of a building in Tavarekere. One person reportedly jumped, sustaining injuries, and has been hospitalized. More details awaited.@THBengaluru @the_hindu pic.twitter.com/cqAtHwNGaT
— Darshan Devaiah B P (@DarshanDevaiahB) October 18, 2023
இதுபற்றி உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர். 7 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இறுதியாக தீயை முற்றிலுமாக அவர்கள் அணைத்தனர். இருப்பினும் கபே முழுவதுமாக கருகிப்போனது. அதன் உள்ளே இருந்த பொருட்கள் எரிந்து வீணாகின.
முன்னதாக கபேவில் இருந்த ஊழியர் ஒருவர் தீவிபத்தில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். 3வது, 4வது மாடிக்கு இடையிலான பகுதியில் இருந்து அவர் கீழே குதித்துள்ளார். படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்கினால் தீயில் சிக்கி விடுமோ என்ற அதிர்ச்சியில் அவர் கட்டடத்தில் இருந்து எகிறி கீழே குதித்தார். இதில் அவர் காயமடைந்துள்ளார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து எஸ்ஜி பாளையா போலீசார் கூறுகையில், ‛‛தீவிபத்து ஒருவர் காயமடைந்துள்ளார். உயிர் பிழைப்பதற்காக 3வது மாடியில் இருந்து ஒருவர் கீழே குதித்துள்ளார். அந்த நபர் காயமடைந்துள்ளார். தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது'' என்றனர்.
இதற்கிடையே தான் கபேவில் தீவிபத்து தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதுபற்றி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீவிபத்தால் சிறிது நேரம் ஓசூர் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
-
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
பெங்களூரில் நடைபெறும் 7-வது உலகத் திருக்குறள் மாநாடு.. தமிழ் அமைப்புகள் கலந்து கொள்ள அழைப்பு! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications