என்னையே கடிக்கிறியா? சிறுத்தையின் கால்களை கட்டி பைக்கில் தூக்கி சென்ற கர்நாடகா இளைஞர்! ஷாக் வீடியோ
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் தன்னை தாக்கிய சிறுத்தையிடம் சண்டையிட்ட நபர் அதன் கால்களை கயிற்றால் கட்டி பைக்கில் கிராமத்துக்கு கொண்டு சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹாசன் மாவட்டம் பாகிவாலு கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால் என்ற முத்து. இவருக்கு கிராமத்தையொட்டிய பகுதியில் தோட்டம் உள்ளது. இங்கு வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் நேற்று காலையில் வேணுகோபால் வழக்கம்போல் தனது தோட்டத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் பாதையில் மக்கள் நடமாட்டம் என்பது அதிகமாக இருக்காது.

இந்நிலையில் தான் புதருக்குள் மறைந்து இருந்த சிறுத்தை ஒன்று திடீரென்று பாய்ந்து வந்து அவரை தாக்கியது. இதனால் அவர் பதறிப்போய் கீழே விழுந்தார். சிறுத்தை அவரை தொடர்ந்து தாக்கியது. இதனால் வேணுகோபால் அலறி துடித்தார். மேலும் ஆக்ரோஷமான வேணுகோபால் தைரியத்தை வரவழைத்து கொண்டு சிறுத்தையிடம் எதிர்த்து சண்டையிட்டார்.
அதாவது தன்னை தாக்க வந்த சிறுத்தையை அவர் பிடித்து கயிற்றால் கால்களை கட்டினார். இதனால் சிறுத்தையால் நகர முடியவில்லை. இதையடுத்து அவர் சிறுத்தையை தனது பைக்கின் பின்பகுதியில் கட்டி தொங்கவிட்டபடி கிராமத்துக்கு சென்றார். சிறுத்தையுடன் அவர் செல்வதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அவர்களிடம் நடந்த சம்பவத்தை வேணுகோபால் விளக்கி கூறினார். இதையடுத்து சிறுத்தை தாக்குதலில் காயமடைந்த அவருக்கு கிராம மக்கள் முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சிறுத்தையை மீட்டனர். அதன்பிறகு சிறுத்தைக்கு கண்டாசி கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில், ‛‛வனவிலங்குகளை காயப்படுத்துவது என்பது சட்டப்படி குற்றமாகும். ஆனால் வேணுகோபால் தனது உயிரை பாதுகாக்கும் வகையில் இதனை செய்துள்ளார்'' என்றனர்.
இதற்கிடையே வேணுகோபால் தனது பைக்கில் சிறுத்தையை கட்டி தொங்கவிட்டபடி செல்வதை சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
-
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications