வசமாக சிக்கிய டிகே சிவக்குமார்.. காங். யாத்திரையில் ரூ.500 நோட்டுகளை வீசியதால் சிக்கல்.. என்னாச்சு?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமார் யாத்திரை மூலம் பிரசாரம் செய்த நிலையில் ரூ.500 நோட்டுகளை அள்ளி மக்கள் மத்தியில் வீசினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில் தற்போது அவர் புதிய சிக்கலில் சிக்கியுள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10ம் தேதி நடைபெற உள்ளது. மே 13ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று அறிவித்தார்.
கர்நாடகாவை பொறுத்தமட்டில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம்ஆத்மி இடையே நான்கு முனை போட்டி நிலவ உள்ளது. காங்கிரஸ் சார்பில் 124 தொகுதிகளுக்கும், ஜேடிஎஸ் சார்பில் 93 தொகுதிகளுக்கும், ஆம்ஆத்மி சார்பில் 80 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பாஜக இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.

காங்கிரஸ் யாத்திரை
மேலும் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் மாநிலம் முழுவதும் யாத்திரைகளை துவங்கி நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் பிரஜா த்வானி யாத்திரை என்ற பெயரில் மாநிலம் முழுவதும் தலைவர்கள் சென்று மக்களிடம் ஆதரவு கோரினார். இந்நிலையில் தான் தேர்தல் அறிவிப்புக்கு முன்பு நேற்று முன்தினம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா பெவினஹள்ளி பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவக்குமார் பிரஜா த்வானி யாத்திரை மேற்கொண்டார்.

டிகே சிவக்குமார் பேச்சு
மண்டியாவில் ஒக்கலிகர் சமுதாய மக்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சிக்கு ஆதரவாக உள்ளனர். இந்நிலையில் தான் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்த டிகே சிவக்குமார் அங்கு யாத்திரை மேற்கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டினார். அப்போது டிகே சிவக்குமார், ‛‛ஜேடிஎஸ் இந்த முறை ஆட்சிக்கு வராது. இதனால் என்னை முதல்வராக்க நம் மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்'' என பேசினார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் சித்தராமையா அல்லது டிகே சிவக்குமார் ஆகியோரில் ஒருவருக்கு தான் முதல்வர் பதவி கிடைக்கும் எனும் நிலையில் அவர் இப்படி பேசினார்.

ரூ.500 நோட்டுகள் வீச்சு
மேலும் டிகேசிவக்குமார் யாத்திரையின்போது திறந்தவெளி பஸ்சின் மீது நின்றபடி பேசினா். பயணித்த திறந்த பஸ்சின் முன்பும், பின்பும் ஏராளமான காங்கிரஸ் கட்சியின் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக அணிவகுத்தனர். அதோடு பல இடங்களில் டிகே சிவக்குமாருக்கு மேளதாளங்கள் முழங்க, வழிநெடுகிலும் நாட்டுப்புற கலைஞர்கள் நடனமாடி வரவேற்றனர். இந்த வேளையில் டிகே சிவக்குமார் திடீரென்று 500 ரூபாய் நோட்டுகளை எடுத்து பஸ்சின் மேல் நின்றபடியே தூக்கி வீசினார். இதனால் யாத்திரையில் பணமழை பொழிந்தது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியது.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அதோடு டிகே சிவக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுபற்றி டிகே சிவக்குமார் கூறுகையில், ‛‛நான் நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 ஆயிரம் வழங்கினேன். நான் ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசவில்லை. இதில் என்ன பிரச்சனை உள்ளது?'' என கேள்வி எழுப்பினார். மேலும் வீடியோ மற்றும் செய்திகளின் அடிப்படையில் சம்பவம் குறித்து மண்டியா புறநகர் போலீசில் புகார் பதிவு செய்துள்ளனர்.

எஸ்பி சொல்வது என்ன?
இதுபற்றி மண்டியா மாவட்டம் சூப்பிரண்டு யத்தீஷ் கூறுகையில், ‛‛ சம்பவம் தொடர்பாக Non Cognisable Offence எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் எப்ஐஆர் பதிவு செய்யவில்லை. அடுத்தக்கட்ட நடவடிக்கை என்பது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்'' என்றார். இதன்மூலம் டிகே சிவக்குமார் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications