பெங்களூரில் குண்டு வெடித்ததா? பாகிஸ்தான் அணிக்கு மிரட்டலா? பாக்., பத்திரிகையாளரின் வீடியோ - பின்னணி
பெங்களூர்: உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் செப்டம்பர் 20ம் தேதி பெங்களூரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது. இந்நிலையில் தான் இன்று பெங்களூரில் குண்டு வெடித்துள்ளதாகவும், பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் எனவும் அந்நாட்டு பத்திரிகையாளர் வீடியோ ஒன்றை பரப்பி வரும் நிலையில் அதன் உண்மை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. வரும் 20ம் தேதி பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

பாகிஸ்தான் இதுவரை மொத்தம் 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்துள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியா 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில் 2 தோல்வியை சந்தித்துள்ளது. இதில் ஒரு தோல்வி என்பது இந்தியாவுக்கு எதிரானதாகும்.
இந்நிலையில் தான் நாளை மறுநாள் நடக்கும் போட்டியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் வெற்றி பெற தீவிரமாக போராடும் என்பதால் இந்த போட்டி சுவாரசியமாக இருக்கும். தற்போது இரு அணி வீரர்களும் பெங்களூரில் தீவிர வலைப்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் வாஜாத் காஸ்மி எனும் பாகிஸ்தான் பத்திரிகையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் பெங்களூரில் குண்டு வெடித்துள்ளதாக கூறியுள்ளார். அவர் பகிர்ந்த வீடியோவில் கட்டடத்தின் மேல்பகுதியில் இருந்து தீப்பிழம்பு ஆக்ரோஷமாக மேலெழும் வகையில் உள்ளது. அதோடு அந்த பதிவில் உலககோப்பை போட்டியில் விளையாட பெங்களூர் சென்றுள்ள பாகிஸ்தான் அணிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Blast in Bangalore. And they say India is safe. Pakistan must raise security concerns for the cricket team which is currently in this city and have their match against Australia on Friday. pic.twitter.com/SP3kkD6BjQ
— Wajahat Kazmi (@KazmiWajahat) October 18, 2023
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், ‛‛பெங்களூரில் குண்டு வெடித்துள்ளது. ஆனால் இந்தியா பாதுகாப்பாக இருப்பதாக கூறுகின்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது இந்த நகரத்தில் தான் உள்ளது. வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாட உள்ளது. இதனால் அணியின் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்ப வேண்டும்'' என கூறியுள்ளார்.
இந்நிலையில் தான் தற்போது பாகிஸ்தான் பத்திரிகையாளர் வாஜாத் காஸ்மி அவதூறு பரப்புவது தெரியவந்துள்ளது. அதோடு பெங்களூரில் குண்டு எதுவும் வெடிக்காததும் உறுதியாகி உள்ளது. மேலும் அவர் பெங்களூரில் செயல்பட்டு வரும் கபே ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்துக்கான வீடியோவை பகிர்ந்து குண்டு வெடித்துள்ளதாக அவதூறு பரப்புவதும் உறுதியாகி உள்ளது.
அதாவது பெங்களூர் கோரமங்களா அருகே ஓசூர் ரோட்டில் போரம் மால் எதிரே உள்ள 4 மாடி கட்டத்தின் 4வது மாடியில் ‛மட்பைப்' எனும் கபே செயல்பட்டு வருகிறது. இந்த கபேவில் தான் இன்று மதியம் தீவிபத்து ஏற்பட்டது. சமையல் அறையில் இருந்த சிலிண்டர்கள் வெடித்தன. இதனால் அந்த கட்டத்தில் இருந்து தீப்பிழம்பு மேலேம்பியது. இந்த வீடியோவை தான் பாகிஸ்தான் பத்திரிகையாளர் தவறாக பகிர்ந்து அவதூறான கருத்தை கூறி பரபரப்பை பற்ற வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications