80s, 90sல் கர்நாடகாவில் வென்ற அதிமுக! இப்போது ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு கைக்கொடுக்குமா?கள நிலவரம் இதுதான்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவில் கூட்டணியில் சீட் கிடைக்காத நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஒரு தொகுதிக்கும், ஓ பன்னீர் செல்வம் 3 தொகுதிக்கும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர். கர்நாடகாவை பொறுத்தமட்டில் 80s, 90s காலத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இருப்பினும் கூட தற்போதைய கர்நாடகாவின் களநிலவரம் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக உள்ளதா? இல்லையா? என்பது பற்றிய முழுவிபரம் வருமாறு:
கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி பாஜக கூட்டணியில் தமிழர்கள் அதிகமாக உள்ள 3 தொகுதிகளுக்கு அதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தாமரை கட்சியின் மேலிடத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதேபோல் ஓ பன்னீர் செல்வம் அணியும் கர்நாடகா சட்டசபை தேர்தல் மீது கண்வைத்தது. ஓ பன்னீர் செல்வம் அணி சார்பில் புகழேந்தி தலைமையில் நிர்வாகிகள் பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து பேசினார். அப்போது உண்மையான அதிமுக நாங்கள் தான். தமிழர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் எங்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரினர்.
வேட்பாளர்கள் அறிவிப்பு: கர்நாடகா சட்டசபை தேர்தலை பொறுத்தமட்டில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோரின் கோரிக்கையை பாஜக ஏற்கவில்லை. இதனால் பாஜக கூட்டணியில் இருதரப்புக்கும் எந்த தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் இருதரப்பினரும் பாஜகவை எதிர்த்த தனித்து களமிறங்க முடிவு செய்தனர். அதன்படி பெங்களூர் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பில் அன்பரசன் போட்டியிடுவதாக எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்தார். இவர் கர்நாடகா மாநில அதிமுக அவைத்தலைவராக உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட வாய்ப்பு வழங்கினார். இதன் தொடர்ச்சியாக ஓ பன்னீர் செல்வம் அணி சார்பில் புலிகேசி நகர் தொகுதியின் வேட்பாளராக நெடுஞ்செழியன் என்பவர் அறிவிக்கப்பட்டார்.

3 தொகுதிகளில் ஓபிஎஸ் அணி: இதன் தொடர்ச்சியாக மேலும் 2 தொகுதிகளில் ஓ பன்னீர் செல்வம் அணி வேட்பாளர்களை அறிவித்தது. அதன்படி பெங்களூர் காந்தி நகர், கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல்(கேஜிஎப்) சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை ஓ பன்னீர் செல்வம் அறிவித்தார். அதன்படி கோலார் தங்கவயல் தொகுதியில் அனந்தராஜா என்பவரும், காந்தி நகர் தொகுதியில் குமார் என்பவரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஓ பன்னீர் செல்வம் அணி 3 தொகுதிகளில் களமிறங்கி உள்ளது.
எம்ஜிஆர், ஜெ., காலத்தில் வெற்றி: இதில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தேர்வு செய்த தொகுதிகளில் தமிழர்களின் ஓட்டுக்கள் தான் வேட்பாளர்களின் வெற்றியை நிர்ணயம் செய்கின்றன. இன்னும் சொல்லப்போனால் கோலார் தங்கவயல் மற்றும் காந்தி நகர் தொகுதிகளில் இதற்கு முன்பு அதிமுக சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு எம்எல்ஏக்களான வரலாறும் உள்ளது. அதாவது எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுக கர்நாடகா அரசியலில் கவனம் செலுத்தியபோது அக்கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

கேஜிஎப்பில் வெற்றி: அதாவது கடந்த 1983, 1989, 1999 தேர்தல்களில் அதிமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர். இந்த 3 ஆண்டுகளில் கோலார் மாவட்டத்தில் உள்ள கேஜிஎப் எனும் கோலார் தங்கவயல் சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கிய பக்தவச்சலம் 3 முறை வெற்றி பெற்றிருக்கிறார். அதன்பிறகு அவர் ஜேடிஎஸ் கட்சியில் இணைந்த நிலையில் எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை. சமீபத்தில் அவர் மரணமடைந்தார்.
காந்தி நகரில் வெற்றி: அதேபோல் பெங்களூர் காந்தி நகர் தொகுதியிலும் அதிமுக சார்பில் முனியப்பா என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் கடந்த 1994 சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் காந்தி நகர் தொகுதியில் களமிறங்கி வாகை சூடி எம்எல்ஏவானார். அதன்பிறகு அதிமுகவுக்கு அங்கு எம்எல்ஏக்கள் கிடைக்கவில்லை. அதன்பிறகு தொடர்ந்து காந்தி நகரில் காங்கிரஸ் வேட்பாளரான தினேஷ் குண்டுராவ் வெற்றி பெற்று வருகிறார். இவர் தான் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
களநிலவரம் என்ன: இந்நிலையில் தான் தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் அணி தனித்தனியே கர்நாடகா அரசியலில் கால்பதித்துள்ளன. பெங்களூரில் உள்ள காந்திநகர், புலிகேசி நகர் மற்றும் கோலார் தங்கவயலில் ஏராளமாக தமிழர்கள் வசித்தாலும் கூட அவர்களின் ஓட்டு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் அணிக்கு கிடைப்பது சிரமம் என்றே கருதப்படுகிறது.

புலிகேசி நகர் நிலவரம்: ஏனென்றால் தற்போது அவர்கள் குறிவைத்துள்ள 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் எம்எல்ஏக்களாக உள்ளனர். புலிகேசி நகரை பொறுத்தமட்டில் அகண்ட சீனிவாச மூர்த்தி எம்எல்ஏவாக உள்ளார். இவர் 2013ல் ஜேடிஎஸ் சார்பிலும், 2018 ல் காங்கிரஸ் சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை காங்கிரஸில் சீட் மறுக்கப்பட்டதால் அவர் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். இந்த தொகுதியில் இவருக்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. இதனால் இங்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் அணியின் வேட்பாளர்கள் வெற்றி பெறுவது கஷ்டமான ஒன்றாக இருக்கும்.
காந்திநகர் நிலவரம்: அதேபோல் காந்தி நகர் சட்டசபை தொகுதியை எடுத்து கொண்டால் அது காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகும். இந்த தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவ் உள்ளார். இவர் 1999, 2003, 2008, 2013, 2018 ஆகிய 5 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது 6வது முறையாக அவர் களமிறங்கி உள்ளார். இவருக்கும் தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. மேலும் தமிழர்களின் ஆதரவும் இவருக்கு உள்ளது. இதனால் இங்கு ஓ பன்னீர் செல்வம் அணியின் வேட்பாளர் குமார் வெற்றி பெறுவது கடினமானதாக இருக்கும்.
கேஜிஎப் நிலவரம்: மேலும் கேஜிஎப் எனும் கோலார் தங்கவயல் சட்டசபை தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் ரூபகலா சசீதர் உள்ளார். இவர் முன்னாள் மத்திய அமைச்சரும், கோலார் தொகுதி மாஜி எம்பியுமான கேஎச் முனியப்பாவின் மகள். இவருக்கும் தொகுதியில் நல்ல செல்வாக்கு உள்ளது. அதேபோல் இந்த தொகுதியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் மாஜி எம்எல்ஏவும், தமிழருமான ராஜேந்திரனும் போட்டியிடுகிறார். இதனால் இந்த தொகுதியிலும் வெற்றி பெறுவது என்பது ஓ பன்னீர் செல்வம் அணிக்கு கஷ்டமான ஒன்றாகும்.
-
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications