200 யூனிட் ப்ரீ மின்சாரம்! மகளிருக்கு ரூ.2000! கர்நாடகாவில் 5 வாக்குறுதி அமலாகும் தேதிகள் இதுதான்!
பெங்களூர்: கர்நாடகாவில் மாதம் ரூ.200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை, வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000 மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.1,500, பெண்களுக்கு இலவச பயணம் உள்பட 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ள நிலையில் அந்த திட்டங்கள் செயல்பாட்டு வரும் தேதியை முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்று அசத்தியது. பாஜக வெறும் 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்தது. கர்நாடகா முதல்வராக காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா, துணை முதல்வராக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் பொறுப்பேற்றனர்.
முன்னதாக தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் கட்சி 5 திட்டங்களை அறிவித்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் க்ருஹ லட்சுமி திட்டத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும். க்ருஹ ஜோதி திட்டத்தில் வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம். அன்னபாக்யா திட்டத்தில் 10 கிலோ அரசி இலவசம். பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் கொண்டு வரப்படும். யுவநிதி டிகிரி முடித்து வேலையில்லாதவர்களுக்கு ரூ.2000, டிப்ளமோ முடித்து வேலையில்லாதவர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ள நிலையில் 5 திட்டங்களையும் நிறைவேற்றுவது குறித்து முதல்வராக பதவியேற்ற நாளிலேயே சித்தராமையா அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு இன்றும் பெங்களூர் விதானசவுதாவில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கப்பட்டட 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு சித்தராமையா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அந்த திட்டங்கள் செயல்படுத்துவது எப்போது? என்பது பற்றி முக்கிய தகவலை கூறினார். இதுதொடர்பாக சித்தராமையா கூறியதாவது: தேர்தலின்போது 5 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்தது. நானும், டிகே சிவக்குமாரும் கையெழுத்திட்ட 5 வாக்குறுதிகள் அடங்கிய கார்டு வீடு வீடாக வழங்கப்பட்டது.

இன்றைய அமைச்சரை கூட்டத்தில் 5 தேர்தல் வாக்குறுதி பற்றி விவாதித்தோம். அனைத்தையும் இந்த நிதி ஆண்டில் செயல்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக 200 யூனிட் இலவச மின்சாரம் திட்டத்தை ஜூலை முதல் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் ஜூலை மாதத்துக்கு முன்பு உள்ள பெண்டிங் பில்லை பொதுமக்கள் செலுத்த வேண்டும்.
மேலும் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் ஜூன் 11ம் தேதியில் இருந்து செயல்பாட்டு கொண்டு வரப்படும். ஏசி மற்றமு் சொகுசு பஸ்கள் தவிர மற்ற அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். அதேபோல் 10 கிலோ இலவச அரிசி திட்டம் வழங்குவதும் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.
குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 திட்டம், டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.3 ஆயிரம் மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.1,500 மாத உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கான கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி உள்ளன. இதில் தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளன. இதனை சரிசெய்யும் பணி ஜூன் 15 முதல் ஜூலை 15 வரை நடத்தப்பட்டு ஆகஸ்ட் 15க்குள் இறுதி செய்யப்படும். அதன்பிறகு இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இந்தத் திட்டம் அனைவருக்கும் பொருந்தும். வறுமைக் கோட்டுக்கு (பிபிஎல்) கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் அல்ல. மாற்றுத்திறனாளி உள்பட சில வகைகளில் மாதந்தோறும் ஓய்வூதியம் பெறுபவர்கள் குடும்ப தலைவியாக இருந்தாலும் கூட ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இந்த திட்டங்களும் இந்த நிதி ஆண்டிலேயே செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்த திட்டம் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு எந்த பாகுபாடும் இன்றி செயல்படுத்தப்படும்'' என்றார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications