2 முக்கிய விஷயம்.. கர்நாடகா பாஜக தலைவராகும் பெண்? யார் இந்த ஷோபா? முட்டிமோதும் சிடி ரவி
பெங்களூர்: கர்நாடகா மாநில தலைவர் பதவியை பெற சிடி ரவி மற்றும் எடியூரப்பாவின் 2வது மகன் விஜயேந்திரா ஆகியோர் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் தான் எடியூரப்பாவுக்கு நெருக்கமான மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே மாநில தலைவராக நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதும், அதன் பின்னணியில் உள்ள 2 முக்கிய விஷயம் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் கடந்த மே மாதம் நடந்தது. இதில் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை இழந்தது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தல் தோல்வி என்பது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தான் தேர்தல் தோல்வியை தொடர்ந்து கர்நாடக மாநில தலைவராக உள்ள நளின் குமார் கட்டீல் விரைவில் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் கர்நாடகா பாஜக தலைவர் பதவி என்பது இந்த முறை ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு வழங்கப்படலாம் என்ற தகவல்கள் பரவின.
மேலும் பாஜக மாநில தலைவர் பதவியை பெற தமிழக பாஜகவின் முன்னாள் மேலிட பொறுப்பாளரான சிடி ரவி, உடுப்பி -சிக்கமகளூர் தொகுதி பாஜக எம்பியும், மத்திய அமைச்சருமான ஷோபா கரந்தலாஜே மற்றும் எடியூரப்பாவின் 2வது மகனும், தற்போதைய துணை தலைவருமான விஜயேந்திரா ஆகியோர் ரேஸில் உள்ளனர். இதில் சிடி ரவி மற்றும் ஷோபா கரந்தலாஜே ஆகியோர் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர். எடியூரப்பாவின் மகன் லிங்காயத்தை சமுதாயத்தை சேர்ந்தவர்.
தற்போதைய சூழலில் கர்நாடகாவில் பாஜக லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு தான் பதவியை வழங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது. பாஜகவில் முதல்வராக இருந்த எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அதோடு மாநில தலைவராக எடியூரப்பா நீண்டகாலம் பணியாற்றினார். இதனால் லிங்காயத் சமுதாயத்துக்கு மட்டுமே பாஜக முன்னுரிமை வழங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இதனால் தான் ஒக்கலிகர் அதிகம் உள்ள பழைய மைசூர் மாவட்டங்களில் பாஜக வளராத நிலையில் உள்ளது. இங்கு பாஜகவுக்கு செல்வாக்கு என்பது மிகமிக குறைந்த அளவில் மட்டுமே உள்ளது. இந்த பகுதி பொதுவாக ஜேடிஎஸ் கட்சியின் கோட்டையாக இருக்கும். ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பழைய மைசூர் பகுதியில் ஜேடிஎஸ் கட்சியை விட காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியது. இதற்கு முக்கிய காரணம் டிகே சிவக்குமார். காங்கிரஸ் தலைவராக இருக்கும் அவர் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர். இவர் தலைவராக செயல்பட்ட நிலையில் தான் அந்த பகுதி மக்கள் காங்கிரசுக்கு ஓட்டுப்போட்டு ஆட்சியை மாற்றி உள்ளனர்.
இதனை நன்கு பாஜக உணர்ந்துள்ளது. இதனால் தான் பாஜக மேலிடம் இந்த முறை கர்நாடகா பாஜக தலைவராக ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவரை நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி பார்த்தால் மத்திய அமைச்சர்
ஷோபா கரந்தலாஜே, சிடி ரவி ஆகியோரில் ஒருவருக்கு தலைவர் பதவி கிடைக்கலாம் என கூறப்படுகிறது. மாறாக எடியூரப்பா தனது மகன் விஜயேந்திராவுக்கு பாஜக மாநில தலைவர் பதவியை வழங்க லாபி நடத்தி வருகிறார். இதனால் தான் புதிய மாநில தலைவர் நியமனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தான் தற்போது இன்னொரு தலைவர் வெளியாகி உள்ளது. அதாவது பாஜக மாநில தலைவராக ஷோபா கரந்தலாஜேவை நியமனம் செய்ய பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் 2 முக்கிய விஷயம் உள்ளதாம். இதில் முதல் விஷயம் என்பது ஷோபா கரந்தலாஜே ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர். இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒக்கலிகர் சமுதாயத்தின் ஓட்டுக்களை பெற முடியும்.
இதன்மூலம் மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் என 3 பிரதான கட்சிகளின் தலைவர்களும் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இது ஒக்கலிகர் சமுதாயத்தின் ஓட்டுக்களை பிரிக்கும். ஏற்கனவே லிங்காயத் மக்களின் ஓட்டு பாஜகவுக்கு இருக்கும் நிலையில் இந்த ஓட்டு பிரிப்பு என்பது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-ஜேடிஎஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளதால் காங்கிரஸை விட அதிகளவில் ஒக்கலிகர் ஓட்டுகளை அறுவடை செய்ய முடியும் என பாஜக நினைக்கிறது.
மேலும் தனது மகன் விஜயேந்திராவுக்கு தலைவர் பதவி வழங்காததால் அவரது தந்தையும், பாஜகவின் மூத்த தலைவரான எடியூரப்பா அதிருப்தி அடையலாம். ஆனால் ஷோபா கரந்தலாஜேவை தலைவராக நியமனம் செய்தால் எடியூரப்பாவும் சமாதானம் ஆகலாம். ஏனென்றால் ஷோபா கரந்தலாஜே எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளர். இதன்மூலம் எடியூரப்பாவை சமாதானம் செய்ய முடியும் என பாஜக மேலிடம் கணக்கிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் கூட சிடி ரவி தனது முயற்சியை கைவிடவில்லை. எப்படியாவது கர்நாடகா மாநில தலைவர் பதவியை பெற்று விட வேண்டும் என தனக்கு தெரிந்த மேலிட தலைவர்களை தொடர்பு கொண்டு லாபி நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications