பாஜக கொடிகள் எரிப்பு.. நகையை அடகுவைத்து காசு வழங்கி சமாதானம் செய்த கர்நாடகா நிர்வாகி.. என்னாச்சு?
கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் விஜய சங்கல்யா யாத்திரை என்பது நடந்து வருகிறது.
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி அங்கு பாஜக சார்பில் விஜய சங்கல்ப யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. மைசூரில் நடந்த யாத்திரையில் கட்சி தொண்டர்களுக்கு பேசியபடி பெட்ரோல் நிரப்ப பணம் வழங்கப்படவில்லை எனக்கூறி தொண்டர்கள் பாஜக கொடிகளுக்கு தீவைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கட்சி நிர்வாகி ஒருவர் தனது நகையை அடகுவைத்து தொண்டர்களுக்கு பணம் வழங்கி சமாதானப்படுத்திய தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். அங்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி கர்நாடகா சென்று புதிய திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். அதேபோல் மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் வியூகம் வகுத்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. கர்நாடகாவுக்கு இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் கட்சியினர் தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர்.

மைசூரில் பாஜக யாத்திரை
காங்கிரஸ், பாஜக தலைவர்கள் மாநிலங்களில் யாத்திரைகளை தொடங்கி நடத்தி வருகின்றனர். பாஜக சார்பில் விஜய சங்கல்பா யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரை மைசூரு மாவட்டம் கேஆர் நகரில் முன்னாள் அமைச்சர் கேஎஸ் ஈஸ்வரப்பா தலைமையில் நடந்தது. இந்த யாத்திரையில் முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா உள்பட ஏராளமான பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்.

பெட்ரோலுக்கு பணம் கொடுக்கவில்லை
பாஜக தலைவர்கள் விஜய சங்கல்ப யாத்திரை வாகனத்தில் நின்றபடி மக்களிடம் ஆதரவு கோரினர். இந்த வேளையில் அந்த பகுதி மற்றும் அதனை சுற்றிய கிராமங்களில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றனர். இந்நிலையில் தான் யாத்திரையில் பங்கேற்ற கட்சியினருக்கு பெட்ரோல் செலவுக்கு பணம் கொடுப்பதாக கூறப்பட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் யாத்திரையில் பெட்ரோல் செலவுக்கு பணம் கொடுக்கவில்லை.

தொண்டர்கள் வாக்குவாதம்
யாத்திரைக்கு வந்திருந்த சுமார் 80 மோட்டார் சைக்கிள்களுக்கு பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் தொண்டர்கள் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தசரா கண்காட்சிக்கான அமைப்பின் தலைவராக உள்ள மிர்லே சீனிவாச கவுடாவிடம் பாஜகவினர் வாக்குவாதம் செய்தனர். மேலும் கோபமடைந்த கட்சியினர் பாஜகவின் கொடிகளை தீயிட்டு எரித்தனர். இதனால் நிலைமை எல்லை மீறி சென்றது.

அடகுவைத்து பணம் வழங்கல்
இதையடுத்து சுதாரித்து கொண்ட கேஆர் நகர் பாஜக சக்தி கேந்திராவின் தலைவர் பிரகாஷ் தனது தங்க நகைகளை அடகு வைத்தார். இதன்மூலம் கிடைத்த பணத்தை தொண்டர்களுக்கு வழங்கி சமதானப்படுத்தினார். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications