Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமித் ஷா நிகழ்ச்சியில் ஏன் ஹிந்தி பேனர்? தமிழ்நாட்டை பார்த்து கத்துக்கோங்க.. விளாசும் கன்னட மீடியா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் பேனர் முழுவதும் ஹிந்தியில் இருந்தது. இது கர்நாடகத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கன்னடா மீடியாக்கள் தமிழகத்தை ஒப்பிட்டு கர்நாடக பாஜக தலைவர்களை விமர்சித்து உள்ளது.

மத்திய பாஜக அரசு இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாக திமுக உள்பட தென் இந்தியாவில் உள்ள கட்சி தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும் மத்திய அரசின் ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி தமிழகம் உள்பட பல இடங்களில் உள்ள ஹிந்தி எழுத்துக்கள் தார்பூசி அழிக்கப்பட்டுள்ளன.

ஹிந்தி பேனருக்கு எதிர்ப்பு

ஹிந்தி பேனருக்கு எதிர்ப்பு

இந்நிலையில் தான் 75வது ஆண்டு சுதந்திர தின விழா ஆண்டையொட்டி மத்திய கலாச்சாரத்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் கர்நாடக தலைநகர் பெங்களூரில் 'சங்கல்ப் சித்தி' நிகழ்ச்சி 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற பேனர் முழுவதும் ஹிந்தியில் இடம்பெற்றிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமித்ஷா தனது நிகழ்ச்சி மூலம் ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதனை கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

 கன்னட மீடியாக்களில் செய்தி

கன்னட மீடியாக்களில் செய்தி

மேலும் கர்நாடகத்தை சேர்ந்த நெட்டிசன்களும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ஹிந்தி மொழி பேனர் இடம்பெறுவது இல்லை. ஆனால் கர்நாடகத்தில் அமித்ஷா நிகழ்ச்சியின் பேனர் முழுவதும் ஹிந்தி மொழி இடம்பெற்றுள்ளது என விமர்சனம் செய்து வருகின்றனர். இதேபோல் தமிழகத்தை ஒப்பிட்டு கன்னட மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழக அரசியல்வாதிகள் ஹிந்தி எதிர்ப்புக்கு தீவிரம் காட்டி வரும் நிலையில் கர்நாடக பாஜக தலைவர்கள் கன்னடத்தை புறக்கணித்து ஹிந்திக்கு ஆதரவு தெரிவிக்கின்றனரா? எனும் வகையில் கேள்வி எழுப்பி உள்ளன. இதுதொடர்பாக திபப்ளிக்ஸ்பாட்.காம் ஊடகத்தில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

பாஜக அஜெண்டா

பாஜக அஜெண்டா

‛‛மத்திய அரசு கர்நாடகத்தை பரிசோதிக்கும் இடமாக பயன்படுத்துகிறது. மத்தியில், மாநிலத்திலும் பாஜக ஆட்சி என்பதால் வளர்ச்சி பணிகள் நடக்கிறது. ஆனால் மத்திய பாஜக தனது கட்சியின் அஜெண்டாவை நடைமுறைப்படுத்த கர்நாடகத்தில் உள்ள பாஜக தலைவர்களை பயன்படுத்தி கொள்கிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் நாட்டில் எங்கு எதிர்ப்பு ஏற்பட்டாலும் பாஜக தனது அஜெண்டாவை கர்நாடகத்தில் செயல்படுத்தி விடுகிறது.

ஹிந்திக்கு முன்னுரிமையா...

ஹிந்திக்கு முன்னுரிமையா...

அந்த வகையில் தற்போது ஹிந்தி திணிப்பு பிரச்சனை எழுந்துள்ளது. தென்இந்தியாவில் கடும் எதிர்ப்பு உள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றிருந்த நிகழ்ச்சியில் ஹிந்தி பேனர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியிலும் ஹிந்திக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமித்ஷா பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மட்டுமே ஹிந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மாறாக பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் அப்படி இல்லை.

தமிழ்நாட்டில் இல்லையே

தமிழ்நாட்டில் இல்லையே

சமீபத்தில் தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஆனால் அங்கு எந்த இடத்திலும் சிறிய அளவில் கூட ஹிந்தி மொழி இடம்பெறவில்லை. மேலும் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் எங்கும் பிரதமர் நரேந்திர மோடி ஹிந்தியில் பேசவில்லை. அவர் ஆங்கிலத்தில் தான் உரையாற்றினார். தமிழ் மொழியில் வணக்கம் தெரிவித்தார். விழா மேடைகள் அனைத்தும் தமிழ் எழுத்துக்கள் நிறைந்து இருந்தன.

 தமிழகத்தில் மொழிப்பற்று அதிகம்

தமிழகத்தில் மொழிப்பற்று அதிகம்

ஆனால் அதே கர்நாடகாவில் அமித்ஷா உள்பட மேலிட பாஜக தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ஹிந்தி மொழிக்கு பிரதான இடம் வழங்கப்படுகிறது. இதனால் பாஜகவினரே ஹிந்தி திணிப்பை முன்னெடுக்கிறார்களோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. திராவிட நாடான தமிழ்நாட்டில் மொழிப்பற்று அதிகம் என்று சொல்லலாம். நீங்கள் தமிழ்நாட்டில் சென்று முகவரி கேட்டால் அவர்கள் தமிழ் மொழியிலேயே பதிலளிக்கிறார்கள். மேலும் தமிழ்நாட்டில் உள்ள தேசிய கட்சிகள் எந்த காரணத்தை கொண்டு வெல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் தான் தமிழ்நாட்டில் ஹிந்தி பற்றி பாஜக தலைவர்கள் பேசுவது இல்லை. கர்நாடகாவில் மட்டும் தான் ஹிந்தி பற்றி பேசுகின்றனர். இதற்கு கன்னட மக்கள் தான் தக்க பதில் கொடுக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+