குலை நடுங்க வைத்த அத்திப்பள்ளி பட்டாசு விபத்து.. காரணம் இதுதான்! ஆய்வு செய்த பின் சித்தராமையா பேட்டி
பெங்களூர்: அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்து வழக்கு குற்ற புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று தீ விபத்து நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்த பிறகு கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
தமிழ்நாடு - கர்நாடக மாநில எல்லையில் அத்திப்பள்ளி அமைந்துள்ளது. பெங்களூர் புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா அத்திப்பள்ளியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான பட்டாசு கடைகள் இருக்கின்றன. இந்த பட்டாசு கடைகளில் தமிழகம், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் பலரும் பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர். மொத்தமாகவும் சில்லறையாகவும் பட்டாசுகளை அதிகம் பேர் வாங்கி செல்வதை காண முடியும்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அங்குள்ள பட்டாசு கடைகளில் பட்டாசுகள் விற்பனைக்கு குவிந்துள்ளன. வித விதமான பட்டாசுகளை பட்டாசு கடை உரிமையாளர்கள் கொள்முதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தான், நேற்று காலை நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடைக்கு லாரிகளில் பட்டாசுகள் வந்து இறங்கின. சரக்கு வாகனங்களில் இருந்து பட்டாசுகளை இறக்கிய போது திடீரென தீ பிடித்ததாக சொல்லப்படுகிறது.
இதனால், பட்டாசுகள் வெடித்து சிதறின. மளமளவென தீ பட்டாசு கடை முழுவதும் பரவியது. இதனால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதற்குள் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அதாவது நேற்று இரவு 7 மணி அளவில் பட்டாசு கடையில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் பட்டாசு கடைக்குள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது தீயில் கருகி 14 பேர் இறந்து கிடந்தனர். தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 13 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். தீ விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று அறிவித்தார். தீ விபத்து குறித்து அத்திப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்டாசு கடை உரிமையாளர் நவீன் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பட்டாசு கடை உரிமையாளரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, இன்று பட்டாசு விபத்து நடைபெற்ற இடத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியதாவது:- அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்து வழக்கு குற்ற புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. பட்டாசு கடை உரிமையாளரின் கவனக்குறைவு, பாதுகாப்பின்மையால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் காயம் அடைந்தோருக்கான சிகிச்சை செல்வை கர்நாடக அரசு ஏற்கும்" என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications